இறைவா.....
நீயே எங்களை படைத்தாய்..
இன்பத்தை தருகின்றாய்..சில
நேரங்களில் துன்பத்தையும்
தருகின்றாய்.
இன்பம் தரும்
போது உன்னை
மறந்து போகலாம்..
துன்பம் வரும்
போது உன்னை
தூற்றவும் செய்யலாம்..
அதையெல்லாம்
நீ வகை
செய்வதே
இல்லை..
செய்த உதவியை
ஒரு போதும்
நீ சொல்லிக்
காட்டுவதும் இல்லை..
நன்றி மறந்தவர்களை
நீ நிந்தனை
செய்வதும் இல்லை..
உனக்கு மறதி இல்லை..அதனால்
தான் உன்னை மறந்தவர்களையும் மறக்காமல் வாழ வைக்கிறாய்..
நீ பெருமைக்குரியவன் அதனால் தான் பெருமையோடு அலைபவர்களையும் பொறுமையோடு கையாள்கிறாய்..
சூழ்ச்சியையும் அறிந்தவன் நீ.. அதனால் தான் சில நேரங்களில் அந்த சூழ்ச்சியில் அவர்களை விளையாட விட்டு வேடிக்கைச் செய்கிறாய்..
மனதில் நினைப்பதையெல்லாம் உன்னிடம் மட்டுமே சொல்ல முடியும்..
அதை மனசுக்குள் வைத்து சமயம் பார்த்து வஞ்சம் தீர்க்க உனக்குத் தெரியாது..
அதில் நல்லவைகளை அறிந்து வந்து அன்போடு அரவணைக்க மட்டுமே உனக்குத் தெரியும்..
உனக்கு பேராசை
ஒன்றும் கிடையாது..
ஓராசை மட்டும்
தான் உண்டு..
உன்னிடம் கேட்க வேண்டும் என்ற அபிலாசை தான் அது..
தன்னிடம் கேட்கவில்லையே
என்று வருத்தப்படுபவன் உன்னை தவிர வேறு யார் இருக்க முடியும்..
உன்னிடம் கை ஏந்துபவர்களை
நீ உதாசீனம் செய்வதில்லை..
தாழ்ந்தவன்
உயர்ந்தவன் என
தராதரம் பார்ப்பதில்லை..
மனிதர்களில்
சிலரை தெய்வம் என்கிறார்கள்..
அந்த தெய்வங்கள் உன்னிடம் தஞ்சமாகி கிடப்பதை யாரும் அறிவதில்லை..
வெறுப்போடு ஒதுங்குபவர்களையும் விருப்போடு
பார்ப்பவன் நீ..
உன்னை போல் ஆதரிப்பார் யாரும் எங்கும் இல்லை..
உன் கருணையே
சொல்ல எனக்கு வார்த்தைகளில்லை..
நீ இல்லையென்றால்
எதுவுமே இங்கில்லை..
உன் அன்பு சுகமானது.
பரிசுத்தமானது..
அந்த அன்பில் தானே ஜீவனே வாழ்கிறது..
முழுமையாக அதை உணர்ந்துக் கொள்ள மரணம்(மறுமை) வரை கண்டிப்பாக காத்திருக்க வேண்டும்..
#இறைவா உன் அடியவர்க்கு
நீயே அருள்புரிந்து
காக்க வேண்டும்..
Saif Saif
No comments:
Post a Comment