Sunday, September 15, 2019

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் வாவர்_ஹாஜியார்

சகோதரர் Colachel Azheem
அவர்களின் பதிவு..
அறிய வேண்டிய
அரிய மனிதர்கள்....


கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டுமான பணிகளுக்கு கதவுகள், கட்டளைகள் உட்பட மரம் பர்ணிச்சர்கள் தயாரித்து வழங்கிய ஜாரியா சாமில் நிறுவனத்தினை நடத்திய #வாவர் ஃபக்கீர் முகமது ஹாஜியார் குமரி மாவட்டத்தில் முஸ்லிம் சமூகத்திலிருந்து மர அறுவை மில் நடத்திய (ஒரே) நபர்..

கோட்டாறு முஸ்லிம் சமூகத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர்..
அன்றைய காலத்தின் எஸ் எஸ் எல் சி கல்வியாளரான வாவர் ஹாஜியார் ஆங்கிலத்தில் புலமை மிக்கவர்... சிங்கப்பூரின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Malaysian Refrigerating Company (MRC)ல் Administrative Officer ஆக பணியாற்றிய பெருந்தகை.

MRC கம்பெனி கப்பல் பயணிகளுக்கு உணவு சப்ளை செய்யும் நிறுவனம் ஆனதால் வாவர் ஹாஜியாருக்கு உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது..


இடலாக்குடியில் வாவர் ஹாஜியார் ஆரம்பித்த #ஜாரியா சாமில் நிறுவனத்தில் சுமார் 150 பேர் வேலை செய்துள்ளனர்..தான் வெளிநாட்டில் இருந்தாலும் உறவினர் மேற்பார்வையில் மர அறுவை மில் நடந்து வந்துள்ளது..

எம் ஜி ஆரின் திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக புகழ்பெற்ற ஜஸ்டின் ஆரம்ப காலத்தில் இங்கு வேலை பார்த்தவர்..

ஜாரியா சாமில் நிறுவனம் Forest Contract மற்றும் ரப்பர் எஸ்டேட் Coup Contract துறையில் குமரி மாவட்டத்தில் முதல்நிலை நிறுவனமாக திகழ்ந்துள்ளது.. இந்த நிறுவனம் காளை வண்டி, வில் வண்டிகளுக்கான மரத்தினாலான சக்கரம் உற்பத்தியில் சிறந்து விளங்கியுள்ளது..
வீடுகளுக்கு மின்சார ஒயரிங் தேவைகளுக்கான தரமான ரீப்பர் பட்டியல் பல்வேறு மாநிலங்களுக்கும் விநியோகம் செய்துள்ளனர்...

விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டுமான பணிகளுக்கு திட்டமிட்ட அன்றைய காலத்தில் மர பர்ணிச்சர்கள் சப்ளை செய்யும் காண்டிராக்ட் முழுவதும் பெற்று ஜாரியா சாமில் தரமான மரச் சாமான்களை சப்ளை செய்த பெருமையை பெற்றது.
விவேகானந்தர் நினைவு மண்டபம் திறப்பு விழாவில் ஜாரியா சாமில் நிறுவனம் கவுரவிக்கப்பட்டுள்ளது அன்றைக்கு மதச்சார்பற்ற பண்பாடு மேலோங்கி இருந்ததை உணர முடிகிறது...

மார்க்க சேவையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் இஸ்லாமிய கலாச்சார கழகத்தின் சார்பில் ஜும்ஆ பள்ளிவாசல் வருவதற்கு காரணமான வெகுசிலரில் முக்கிய பங்கு வகித்தவர் வாவர் ஹாஜியாரும் ஒருவர்..
பள்ளிவாசல் கட்டுமான பணிகளுக்காக சிங்கப்பூர் சென்ற மர்ஹும் எஸ். பி.எம். சிறாஜுதீன், வழக்கறிஞர் அகமதுகான் உள்ளிட்ட குழுவினருக்கு பெருந்தொகை வசூலித்து கொடுத்தனுப்பிய பண்பாளர்...

தனது மகன்களுக்கு

ஹபீபுல்லாஹ் Vavar F Habibullah
கரீமுல்லாஹ்

அத்தாவுல்லா Athavullah Athavullah
நஜீமுல்லாஹ் , றஹீமுல்லா,Abu Haashima ஷைபுல்லாஹ் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த பெருந்தகை...
என்றும் நினைவு கூறத்தக்கவர்.

Colachel Azheem

[தந்தையைப் பற்றி அறிந்திராத பல நிகழ்வுகளை கண்முன் கொண்டு வந்த சகோதரர் குளச்சல் அஜீம் அவர்களுக்கு அன்பின் நன்றிகள்..Saif Saif]
Abu Haashima

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்! !
வாவர் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்! !
வாவர் குடும்ப அன்பு சகோதரர்கள்
அனைவரும் செயல் வீரர்கள்
வாழ்த்துவதில் மகிழ்கின்றேன்
அன்புடன் Mohamed Ali

No comments: