Friday, September 20, 2019

மதுரை தட்டுக்கடை


Dr.Vavar F Habibullah

நமதூர்... நல்ல கொத்து
புரோட்டா,தம் பிரியாணி
சாப்பிட வேண்டும் என்றால்
இங்கு பிரச்னையே இல்லை.

மர்ஃபியில் இருந்து
25 கிலோ மீட்டர் தூரம்
ஈஸ்ட் பிளேனோ வரை..
காரில் பயணித்தால் இந்திய
உணவகங்கள், குறிப்பாக
தமிழக உணவகங்களான
அஞ்சப்பர்,மதுரை தட்டுக்கடை
எல்லாம் வரிசையாக கண்ணில்
படும். ஏராளமான தமிழ்
மாணவர்கள்,இளைஞர்களை
தமிழ் குடும்பங்களை
இங்கே இரவு நேரங்களில்
அதிகம் பார்க்கலாம்.


மதுரை தட்டுக்கடைக்குள்
நுழைந்தால் மதுரை கோனார்
கடைக்குள் நுழைந்தது போலவே
இருக்கிறது.கடைக்குள் தமிழ்
கலாச்சாரம் இயல்,இசை,
நாடகம் என்ற முத்தமிழால்
பின்னி பிணைந்து கிடக்கிறது.

ஒரு பக்கம் ரஜினியின் படம்
நீள் திரையில் ஓடுகிறது.
காணும் இடமெல்லாம்
நமதூர் திரைப்பட நடிகர்
நடிகையர் முழு நீள
போஸ்டர்கள் உள் சுவற்றை
பிரமாண்டமாக
அலங்கரிக்கின்றன.

தமிழன் வாழ்வோடு பின்னி
பிணைந்து விட்ட
சினிமா கலாச்சாரத்தில்
இருந்து அவனை விடுவிப்பது
என்பது அவ்வளவு எளிதான
செயல் அல்ல என்றார்
அமெரிக்க வாழ் தமிழர்
வாழ்க்கை பற்றி நன்கு அறிந்த
என்னோடு வந்த தமிழ்ப்
பெண்மணி ஒருவர்.

கொத்து புரோட்டோ பிளேட்
ஒன்றுக்கு நமதூர் ரேட்டில்
ஆயிரத்து ஐநூறு வரை பில்
போடுகிறார்கள்.டேஸ்ட்
பரவாயில்லை.தம் பிரியாணி
ஏனோ டேஸ்டாக இல்லை.





No comments: