பதிவு செய்தவர்
John Durai Asir Chelliah.
“Muhammad:
The Messenger of God”
–இது ஒரு ஈரானிய திரைப் படம். (2015)
இதற்கு இசை அமைக்க ஒப்புக் கொண்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.
அவ்வளவுதான் !
எதிர்பாராத திசைகளில் இருந்தெல்லாம் ஏகப்பட்ட எதிர்ப்பு எழுந்தது ஏ.ஆர். ரஹ்மானுக்கு !
“முஹம்மது நபியின் பெயரில் சினிமா வெளியிடக் கூடாது
இது அவரை அவமதிப்பதாகும்."
என்று ஃபத்வா என்ற மார்க்கத் தடையை ஏ.ஆர்.ரஹ்மான் மீது விதித்தது மும்பை ராஸா அகாடமி என்ற அமைப்பு.
அந்த அமைப்பைச் சேர்ந்த நூரி என்பவர் ஏ.ஆர். ரஹ்மானிடம் எழுப்பிய கேள்வி :
"என்னுடைய
மறுமை நாளில் நான் எழுப்பப்பட்டு அல்லாஹ் முன் நிற்கும்போது ‘இப்படியான ஒரு படத்தை நீ ஏன் தடுக்கவில்லை' என அல்லாஹ் என்னிடம் கேட்டால் நான் அதற்கு என்ன பதில் சொல்வது ?”
- இப்படி ஒரு கேள்வியை கேட்டால் , ரஹ்மான் திணறிப் போவார் என்று
அந்த அமைப்பு நினைத்திருக்கலாம்.
ஆனால் இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த பதில் எவருமே எதிர்பாராதது !
“உண்மைதான். என் கவலையும் அதேதான்.
அதனால்தான் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கிறேன்.
"மறுமை நாளில் அல்லாஹ்வை நான் சந்திக்கும்போது , அல்லாஹ் என்னிடம்
‘என் அன்புக்கு உரிய முஹமது நபி பற்றி , அவரது அன்பைப் பற்றி , பண்பைப் பற்றி நல்லவிதமாக மக்களுக்கு எடுத்துச் சொல்லும் இந்த படத்துக்கு இசை அமைக்கும் நல்ல வாய்ப்பு உன்னிடம் வந்தபோது , நீ ஏன் அதை பயன்படுத்தி அந்த
நல்ல காரியத்தை செய்யவில்லை’ என்று அல்லாஹ் என்னிடம் கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?”
இப்படி ஒரு எதிர் பாட்டு ஏ.ஆர்.ரஹ்மான் பாடுவார் என எவருமே எதிர்பார்க்கவில்லை.
அமைதியானது அந்த எதிர்ப்பு அமைப்பு.
ஆச்சரியமான மீடியாக்காரர்கள்
ரஹ்மானிடம் கேட்டார்கள்:
"எங்கிருந்து உங்களுக்கு கிடைத்தது இப்படி ஒரு பொருத்தமான பதில் ?"
புன்னகையுடன் பதில் சொன்னார் ஏ.ஆர். ரஹ்மான்:
"எல்லா புகழும் இறைவனுக்கே."
John Durai Asir Chelliah
_-_-_-_-_-_-_-_-_-_-_-_
(தி மெஸேஜ், உமர் முக்தார் போன்ற
அருமையான
வரலாற்றுப் படங்களை பார்க்காதவர்கள் யாரும் இருந்திருக்கிறார்களா..!?
உமர் முக்தாரில்
நடித்த நடிகர் பிறகு இஸ்லாத்தையும் தழுவினார்..
நாகூர் ஹனிபா பாடல்களில் வழி வரலாற்று நிகழ்வுகளை அறியாதவர்கள் எவரேனும்
இருக்க முடியுமா..!?
பிற மத மக்களையும் இஸ்லாமிய வரலாறு கேட்க வைத்த பெருமை நாகூர் ஹனிபாக்கு உண்டு.)
No comments:
Post a Comment