Saturday, October 3, 2015

பண்டாரிகளின் மேலான கவனத்திற்கு ...

 J Banu Haroon
அவ்வப்போது சின்ன சின்ன தேவைகளுக்கும் அருமையான சமையல் ஆட்கள் (பண்டாரிகள் )கிடைப்பார்கள் .பெண்களுக்கான கஷ்டமான வேலைகள் இங்கெல்லாம் குறைவே !..

அக்கடாவென்று அவர்கள் கொடுத்த லிஸ்டில் உள்ள சாமான்களை வாங்கிப்போட்டுவிட்டு ...குளித்து ரெடியாகி விடலாம் ! நிம்மதியாக சாப்பிடுவதற்கும் ,விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதற்கும் ....நிறைய டைம் எடுத்துக்கொள்ளலாம் .

பரோட்டா ,கோழி சம்மா செய்வதற்கு கூப்பிட்டனுப்பிய பண்டாரி கொடுத்த லிஸ்டில் 10பாட்டில் ஸ்பிரின் ட் ,அல்லது செவென் அப் என்றிருந்தது .
'எதுக்கு தம்பி இதெல்லாம் ?..'
'வாங்கி வைங்க ...அது இல்லாட்டி நமக்கு சரிப்படாது !...'
'ஒ !..எத்தனை பேர் கையாள் வருவாங்க ?'..என்றேன் .
'மொத்தம் அஞ்சு பேர் ! '...சொல்லிவிட்டு போய்விட்டார் .

மறுநாள் காலையிலேயே பிரம்மாண்டமான தவா .தேவையான பாத்திரங்கள் பரோட்டா விசிற பெஞ்ச் என்று தடபுடலாக வந்திறங்கியது .ஆட்களும் அமர்க்களமாய் ...வந்திறங்க ,
எங்கள் வீட்டின் பெரியவர்கள் லிஸ்டில் இருந்த அஜினோமோடோ ,கேசரி பௌடர் ,ஸ்பிரின் ட் இதையெல்லாம் தேவையில்லாதவை என்று அடித்து விட்டு கடைக்கு லிஸ்டை அனுப்பி விட ...வந்த பொருட்களில் அவையெல்லாம் மிஸ்ஸிங் ...

பண்டாரிக்கோ செம கடுப்பு .'நா பல வருஷம் மலேசியாவில இருந்துட்டு வந்த ஆளு ...இதெல்லாம் இல்லாம என்னால பண்ண முடியாது .பரோட்டா மாவில ஸ்பிரின் ட் ஊத்தாட்டா சாப்ட்நெஸ் வராது என்று அவர்களிடம் சொல்லிவிட்டு ...முட்டைகளை உடைத்து ஊற்றச் சொல்லி அவர்கள் எவ்வளவோ போராடியும் ..கடைக்கு ஆள் அனுப்பி அவருக்கு தேவையான மிஸ்ஸிங் ஐட்டங்களை வாங்க விட்டு என்னிடம் பில்லை நீட்டி விட்டார் .நோ முட்டை .

பரோட்டா மாவு உடனடியாக உப்பி வந்தது .சம்மாவில் கேசரி பௌடரும் ,அஜினோமோடோவும் புது வாசனை தந்தது .எனக்கென்னமோ ருசிக்கவில்லை .

இப்போதெல்லாம் சீக்கிரம் ஆட்டிறைச்சி வேக ,சாப்ட்நெஸ் கொடுக்க சாரிடன் ,க்ரோசின் போன்ற மாத்திரைகள் இறைச்சியுடன் வேக வைக்கப்படுகிறதாம் .உண்மையா ?...தாளிச்சா ,பச்சடியில் கேசரி பௌடர் ஏன் கலருக்காக சேர்க்கப்படுகிறது ?...நிறம் கொடுக்கவும் ,கிருமிகளை நாசம் செய்யவும் நம்முடைய அன்றாட சமையலில் நாம் பயன் படுத்தும் மஞ்சள் தூள் என்ன ஆயிற்று ?...

வீட்டு விசேஷங்களில் பரிமாறப்படும் விருந்துகளில் எதற்கு கமர்ஷியல் நடவடிக்கை ?....உடல் நலத்திற்கு கேடு என்பது தெரிந்து செய்கிறார்களா ?..தெரியாமல் செய்கிறார்களா ?...

நம்முடைய பாரம்பரிய உணவுகளையே பார்த்துப் பார்த்து சமைத்துப் பரிமாறலாமே !...கமர்ஷியல் வேண்டாமே !...சட்டியடியில் பொறுப்பேற்று நிற்கும் ஆண்கள்தான் இதற்கு முழு பொறுப்பும் எடுத்துக்கொள்ள வேண்டும்

!....
 

No comments: