Sunday, October 18, 2015
அதிகாலையில் முகத்தில் உரசும் இதமான குளிர் காற்று...
அதிகாலையில் முகத்தில் உரசும் இதமான குளிர் காற்று...
குழந்தையின் சிணுங்கல்கள்
பிள்ளைகளின் புத்தக சுமைகள்..
குக்கரின் விசில் சத்தம்..
ஆட்டோக்களில் குழந்தைகளின் நெரிசல்கள்..
சாலைகளில் காலை நேர டிராபிக்..
பைக்கில் சாலையில் மழையின் தாலாட்டு...
தினத்தந்தியில் படிக்கும் கன்னித்தீவு..சாண்டில்யன்...
ராஜேஷ் குமார் க்ரைம் நாவல்..
மீன்கடைகளில் அலை மோதும் கூட்டம்..
மயில் கடையில் சுக்காப்பி
உளுந்த வடை..
பாட்டி கொண்டு வரும் அரிசி முறுக்கு,
பீமா பேக்கரி நெய் முறுக்கு..
பழனி ஏத்தங்காய் வத்தல்..
ராமலெஷ்மி ஹல்வா...
பானு சிக்கன் புரோட்டா..
தெருவில் வரும் பப்படக் காரன்..
அருணாவின் க்ரேப் ஐஸ்..
இரவில் வரும் பாம்பே பனாரஸ்.
கல்யாண வீடுகளில்
காலையில் உப்புமா..
"வாப்ப லேய் எனக்கு எல்லாம் தெரியும் லேய்" ஜப்பார் காக்காவின் அட்டகாசப் பேச்சு...
அசனார் அண்ணனின்
முறையான யோகா...
காஜாப்பாவின் "எல்லோரும் பிரெஷ்ஷா குளிச்சிட்டு பசியாறுங்கோ"...
செங்குள டூர்னமென்டில் (டெல்ஸ்,ஈகிள்) புவானும்,செய்தும் ஓப்பனிங்..பஸ்லுல்லாவின் ரிச்சர்ட் ஹாட்லி பெளலிங் ஸ்டைல்.ஹமீதின் ஸ்பின் பெளலிங்..
பெருநாட்களில் தெருக்களில் நாகூர் ஹனிபாவின் கம்பீர குரல்.,
விளக்குகளின் அலங்காரம்...
வெள்ளிக்கிழமை ஜும்மாவில் நண்பர்கள் சந்திப்பு..
இரவு சாப்பாட்டில் மனைவியின் கை பக்குவத்தில் சூடான முறுவல் தோசை சாம்பார்..
குமரியின் சூரிய உதயம்,அஸ்தமனம்..
பொங்கி வரும் கடலலைகள்..
சுசீந்திரம் தெப்பக் குளம்..
நாராயணன் டிப் டாப் சலூன்..
கண்ணன் கடை சூடான இட்லி சாம்பார்..
பிள்ளைகளின் கொஞ்சல்...
மனைவியின் வாஞ்சனை..
தாயின் பரிதவிப்பு...
தந்தையின் அரவணைப்பு...
#நித்திரைகள் சில நேரங்களில் கண்களை மட்டுமே மூட வைக்கிறது....
Saif Saif
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment