Sunday, October 4, 2015

புனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (9)

மக்காவுக்கு வந்து சேரும் இந்திய ஹாஜிகளை கவனிக்கும் பொறுப்பு சவூதி அரசால் அங்கீகரிக்கப்பட்ட, பித்தியேக ஏஜன்ஸிகளையே சேரும். இந்திய ஹஜ் குழு வோ அல்லது தமிழ்நாடு ஹஜ் குழுவோ அவர்களின் உரிமைகளில் தலையிட முடியாது. அங்குள்ள சட்டங்கள் மிகவும் கடுமையானவை. இந்திய தூதரக அதிகாரி கள், சிலவற்றில் பாராமுகமாக நடந்து கொள் வார்கள். ஆனால் இப்போது நிலை அவ்வாறு இல்லை.

இந்திய ஹாஜிகளின் எந்த தேவைகளையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்காக அல்லும் பகலும் சேவை செய்வது ஒன்றையே தன் முழு குறிக்கோளாகக் கொண்டு, மிகச் சிறந்த பணியை ஆற்றி வருபவர் தமிழகத்தை சார்ந்த அதிலும் குறிப்பாக, குமரி மாவட்டத்தை சார்ந்த துடிப்பான இளம் IFS அதிகாரி, திரு.முபாரக் IFS அவர்கள். முபாரக் அவர்கள், இந்திய கான்சல் ஜெனரலாக - ஜித்தாவில் பணியாற்றி வருகிறார்.

பெரிய அதிகாரி என்ற பந்தாவை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, மக்களோடு மக்களாக கலந்து, அவரகளின் தேவைகளை நிறைவு செய்வதிலேயே தன் முழு நேரத்தையும் செலவிடுகிறார். தமிழக ஹாஜிகளுக்கு இவர் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.

சமீபத்தில் மக்காவில் நிகழ்ந்த துயர சம்பவத்தால் உறைந்து போயிருந்த ஹாஜிகளின் குடும்பங்களுக்காக, இவர் செய்த உதவிகளை நினைத்து கண்ணீர் மல்க நன்றி கூறுகின்றனர், இவர் உதவிகளை பெற்ற இந்திய ஹாஜிகள். ஒரு பம்பரம் போல் சுழன்று, ஹாஜிகளுக்காக இவர் செய்த உதவிகள் ஏராளம் ...ஏராளம்.

இளம் அதிகாரி முபாரக் அவர்கள், நமது பாராட்டுக்கு உரியவர் ஆகிறார்.அவர் பணி மேலும் சிறக்க வாழ்த்துவோம்.
 
Vavar F Habibullah
 

No comments: