மௌனம்
உலகில் மிக மிக அழகானது.
சுற்றுச் சூழலில் உணர்த்தப்படும் ஒவ்வாமை உணர்வுகளை ஜீரணிக்க முடியாமலும், வலுக்கட்டாயமாக ஏற்படுத்தப்படும் அழுத்தத்தினால் உண்டாகும் அஜீரணத்தை வார்த்தை எதுவும் பிரயோகப்படுத்த முடியாதவாறு பலவந்தமாய் வாய்க்கு பூட்டு போட்டு அடைத்து விடுகிற நெருக்கடியினாலும், அடிமனதில் சுழலும் வெப்பக்காற்று, பக்கத்தில் நின்று சுவாசிப்போரின் நாசிகளால் கூட உணற முடியாத வகையில் வித்தை காட்டி அமைதிச் சூழலை ஏற்படுத்தி வைத்து விடுகிறது.
மனம் உவக்காத, அடிப்படையான நல்லெண்ணங்களுக்கு பகையாக, கோர்த்து வைத்த ஆசைகளை நிறைவேற்றி பார்ப்பதெற்கென்றே, நன்மைகள் என்றே நம்பவும் வைக்கும் பூடகச் செய்கைகள் கண்முன்னே நடக்கையில், வார்த்தைகள் செலவின்றி வெறுமனே வாய்பொத்தி இருந்திடும் செயல், பார்ப்பவர்க்கு புதிராகிப் போகிறதோ என்னவோ, அப்படி மௌனம் கொண்ட வாய் கொண்டவருக்கு, சொல்லி வைக்கும் செயலற்ற, வார்த்தைக்கு வக்கற்ற வாயில்லா ஜீவனுக்கு உவமானமாகிப் போனது போன்ற பழி உணர்வையே ஏற்படுத்தி வைத்து விடுகிறது !
Raheemullah Mohamed Vavar
No comments:
Post a Comment