மக்கா நகரில், நான் அறியாத இடங்கள் எதுவும் இல்லை. என்னை போலவே மக்கா நகரின் தொன்மையை பற்றி, வரலாறு பற்றி அறிந்து கொள்ள ஆவல் கொண்டவர்கள் மிகவும் அதிகம். ஆனால் வரலாற்று சின்னங்கள் பல அழிக்கப் பட்டு விட்டன என்ற முரண்பாடான தகவல்கள் நம்மை அதிர்ச்சி கொள்ள வைக்கின்றன.
ஜியாத் FORTRESS தான் முழுமையாக தகர்க் கப்பட்டு, அங்கே கம்பீரமான மக்கா ராயல் கிளாக் டவர் எழும்பி இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
முதல் கலீபா அபூபக்கர் சித்திக் வாழ்ந்த வீடு தான், ஹில்டன் ஹோட்டலாக உருமாறி விட்டது என்று சொல்கிறார்கள்.
அன்னை கதீஜா வாழ்ந்த இல்லத்தை தகர்த்து தான், பாத் ரூம்கள் ஹராம் அருகில் கட்டப் பட்டதாக சொல்கிறார்கள்.
முகமது நபி பிறந்த வீடு, இப்போது ஒரு சாதாரண நூல் நிலையமாக மாறி விட்டதாக சொல்கிறார்கள்.
ஒத்தமான் மற்றும் அப்பாசிய கலீபாக்களின் கைவண்ணத்தில் கஅபாவில் உருவான தொன்மை வாய்ந்த கட்டடக்கலையின் எழில் வாய்ந்த கட்டடங்கள் எல்லாம், மசூதி விரிவாக்கம் என்ற பெயரில் தகர்க்கப்பட்டு விட்டதாக சொல்கிறார்கள்.
நபிகளாரின் தந்தை அப்துல்லா மற்றும் ஆமினாவின் வீடு இல்லை.
மகள் பாத்திமாவின் வீடும் இல்லை.
இவர்கள் வாழ்ந்த வரலாறை பறைசாற்ற எந்த நினைவு சின்னமும மக்கா நகரில் இல்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்...
தொடரும்
No comments:
Post a Comment