"சாமிதான்டா எல்லார்க்கும் மூளை தந்தான்....
சப்பான்காரன் மூளைக்கு வேலை தந்தான்......" என்றொரு பாடலைக் கேட்டிருப்பீர்கள் இல்லையா?
தொப்புளைப் பார்த்தவுடன், சுற்றிலும் பம்பரம் சுழற்றத்தான் இங்குள்ள மழுங்கிய மூளைகளுக்கு தோன்றியது.
ஜப்பான் மூளைக்கு என்ன தோன்றியிருக்கிறது தெரியுமா?
மூப்பு முதிர்ந்தவுடன் முட்டிக்கொண்டு வருவதை நம்மால் உணரமுடியாது. அதற்கான உணர்வுகள் வயோதிகம் காரணமாக குறைந்துவிடுவது அல்லது முற்றிலும் உணர்வுகளற்றுப் போவதே காரணம்.
மேற்சொன்ன காரணத்தால் தன்னையறியாமல் சிறுநீர் அல்லது மலம் வெளியாகிவிடும். இதனால் முதியவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாவார்கள். அதேபோல் சிறுவர்களுக்கும், படுக்கையிலுள்ள நோயாளிகள் இன்னும் பிறர் உதவி தேவைப்படுவோர் என அனைவருக்குமே இதுவொரு பெரும் பிரச்சனைதான்.
இதற்குத் தீர்வாகத்தான் ஜப்பானிய மூளை ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளது. D-FREE என்ற இந்தச் சாதனம் தொப்புளுக்கு அருகில் பொருத்தப்படும். இதிலுள்ள சென்சார்கள் (மலக்) குடலில் நிகழும் இயக்கங்களைக் கண்காணிக்கிறதாம். மலம் வெளியாவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் மொபைல் போனில் நிறுவப்பட்டிருக்கும் செயலி மூலம் விழிப்பூட்டுகிறது. இதனால் மேற்குறிப்பிட்ட நபர்களுக்கு உரிய நேரத்தில் உதவ முடியும்.
வாங்க நம்ம சாட்டையை சுழற்றுவோம்.!
பம்பரம் எடுக்காதே என்று எச்சரிப்பதற்கு!!
Rafeeq Friend
No comments:
Post a Comment