புனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (5)
தற்போது மக்காவில் நடந்த உயிரிழப்பு பற்றி பல்வேறு செய்திகள் உலா வருகின்றன.
சாதாரணமாக இந்த உயிரிழப்புகள் மக்காவில், மதினாவில், அரபாத்தில், அல்லது முஸ்தலிபா போன்ற வணக்கஸ்தலங்களில், நிகழ்ந்ததாக வரலாறு இல்லை.
இந்த முறைமட்டும், கிரேன் விழுந்து (human error) இறந்தவர்கள் தவிர; ஒருமுறை ஈரானிய தீவிரவாதிகளாலும், மக்காவில் உயிர்ப்பலி நிகழ்நததுண்டு. வன்முறை சம்பவங்கள் மசூதிகளிலும், சர்ச்சுகளிலும், யூத திருத்தலங்களிலும் நடைபெறுவது என்பது புதிய செய்தி அல்ல. யூத, முஸ்லிம், மற்றும் கிருத்துவர்களுக்கும் சொந்தமான ஜெருசலேமிலும் வன்முறை வெடிப்பது என்பது மிகவும் சகஜமான ஒன்று தான். கடவுளின் சந்நிதானங்களிலேயே, உயிர்ப்பலிகளும் தொய்வின்றி தொடர்கின்றன.மக்காவில் நிகழ்ந்த உயிரிழப்புக்கு காரணங்கள் வேறு...
கிட்டத்தட்ட, 3 மில்லியன் ஹாஜிகள் 6 நாட்கள், மக்கா நகரில் ஒட்டு மொத்தமாக கூடுகின்றனர்.எவ்வளவு சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பினும் மனித உணர்ச்சிகளை கட்டுப் படுத்துவது என்பது இயலாத ஒன்று. சாத்தான் மீது கல் எறிவது என்பது ஒரு வீரச் செயல் போல் இன்றும் கருதப்படுகிறது. தங்களை பாவச் செயல்களின் பக்கம் அழைத்து சென்ற சாத்தானை, கல்லால் அடித்து துவம்சம் செய்யும் மினா நகரம் அந்நாளில் ஒரு போர்க் களம் போல் மாறி விடுகிறது. ஈரானியர்களும், ஆப்பரிக்கர்களும், எகிப்தியர்களும் ஒரு வித போதையில், ஆவேசத்துடன் பெரிய கற்களை கைகளில் ஏந்தி ஓடி வரும் காட்சி பிறரை மிரள வைக்கும். உயிரையே துச்சமென மதித்து இவர்கள் நிகழ்த்தும் இந்த ஆவேசம், பல உயிர்களை பழி வாங்கும் என்பது அந்த நேரத்தில் கல்லெறிபவர்களுக்கு புரிவதில்லை. இறந்து போனவர்களை பற்றி இவர்கள் கண்டு கொள்வதும் இல்லை. இதை ஒரு விதமான PSYCHOLOGICAL CATHARSIS என்று சொல்லலாம். புனித நகரில் எதிர்பாராமல் நிகழும் இந்த மரணங்களை இறைவன் செயல் என்று மிகவும் ஈஸியாக ஏற்று கொள்ளும் மன பக்குவம் இந்த மனிதர்களிடம் வேறூன்றி விட்டது. அரசின் சட்ட திட்டங்கள் பற்றி, பிற நாடுகளின் விமர்சனங்கள் பற்றி, இந்த மனிதர்கள் கவலை கொள்வதாக இல்லை.
"உன்னில் இருந்தே வந்தோம்
உன்னையே வந்தடைகிறோம்"
என்றபடியே வீர மரணத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளும் இந்த உத்தம மனிதர்களை கடவுள் பக்தர்கள் என்று கூற இயலாது; "கடவுள் பித்தர்கள்" என்று வேண்டுமானால் சொல்லலாம்.
No comments:
Post a Comment