Monday, May 4, 2020
லுக்மான் (அலை) மகனுக்கு செய்த உபதேசம்
பிஸ்மில்லாகிர் ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
என் அன்பு சகோதர சகோதரிகளே நாம் இன்ஷா அல்லாஹ் லுக்மான் அலை அவர்களது வாழ்க்கை வரலாறை காண்போம்
அல் குர்ஆனிலே ஸூரா லுக்மானில் லுக்மான் (அலை) தன் மகனிற்கு செய்யும் உபதேசம் ஒவ்வொறு பெற்றோர்களுக்கும் சிறந்ததோர் முன்மாதிரியாகும். இன்று பெற்றோர் தம் பிள்ளைகளை எவ்வாறு அனுகுகின்றார்கள்? தம் சிறார்களை அன்பாக அழைத்து அறிவுரை கூறுபவர்கள் மிகக்குறைவு. பிள்ளைகள் சிறியதோர் பிழை செய்தாலும் உடனே ஏசுபவர்கள்தான் அதிகம். இவ்வாரான பிழையான அனுகுமுறைகள் காரணமாகவே பிள்ளைகள் பெற்றோர்களை விட்டும் தூரமாகின்றனர்.
தற்காலத்தில் எல்லோரும் குழந்தை உளவியல் என்று பாடம் போட்டுப் படிக்க விரும்புகின்றனர். இருப்பினும் லுக்மான் (அலை)அவர்களின் உபதேசம் குழந்தை உளவியலுக்கு அடித்தளமாக இருந்தது என்பதை உணரத்தவரிவிட்டனர். இதோ லுக்மான் (அலை) அவர்களின் உளவியலை மையப்படுத்திய அனுகுமுறையை சற்று சிந்தையில் அலசிப்பாருங்கள்.
லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் புதல்வருக்கு கூறிய நல்லுபதேசம் எதை பற்றியது”?
அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே,அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்(எனவே, அல்லாஹ்வுக்கு பயந்து கொள்),தொழுகையை நிலை நாட்டுவாயாக,நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக,கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக,(பெருமையோடு) முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே,பூமியில் பெருமையாகவும் நடக்காதே,நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்,குரலையும் தாழ்த்திக் கொள்.
அல்குர்ஆனில்,
31:13. இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).
31:16. (லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே எடையுள்ளது ஆயினும்; அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்.
31:17. “என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்.
31:18. “(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
31:19. “உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்; குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும்.
அழகிய முறையில் கனிவான உபதேசங்கள். ஒவ்வொறு வார்தையிலும் 'யா புனய்ய' என் அருமை மைந்தனே என்ற கனிவான வார்த்தை.
இவ்வாரான வார்தைகள்தான் எம் சிறார்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். லுக்மான்(அலை) அவர்களின் உளவியல் ரீதியான அனுகுமுறைகள் தொடர்கபாக பிரத்தியேக ஆய்வுகள் நடாத்தப்பட வேண்டியமை காலத்தின் தேவையாகும். எனவே லுக்மான்(அலை) அவர்களின் உளவியல் ரீதியான அனுகுமுறைகளை எல்லா பெற்றோர்களும் கடைபிடித்தால் எதிர்கால சந்ததியினரின் எதிர்காலம் ஒளிமயமாகும் என்பதில் ஐயமில்லை.
நாம் வாழ்கின்ற இந்த உலக வாழ்க்கை, இன்பமும்,துன்பமும் கலந்த கலவை.துன்பத்தை அனுபவிக்காமல் இன்பத்திலேயே மூழ்கியவனும் கிடையாது.இன்பத்தை சுவைக்காமல் துன்பத்திலேயே சிக்கியவனும் கிடையாது. நம்மைப் படைத்த இறைவன் இரண்டையும் ஒன்றன் பின் ஒன்றாகத் தருகிறான்.
ஒரு நொடியில் ஏற்படும் துன்பம், அடுத்த நொடியில் ஏற்படும் இன்பத்தால் மறைந்து போய்விடும். ஓர் உயிரிழப்பு ஏற்பட்டு துன்பத்தில் துவண்டு கொண்டிருக்கும் ஒரு வீட்டில், புது வரவாக ஒரு குழந்தை பிறப்பது, அந்த வீட்டில் குதூகலத்தை ஏற்படுத்துகிறது. பொருளாதாரத்தில் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து மனம் நொந்து போன ஒருவனுக்கு சிறந்த ஊதியத்தில் பணி கிடைக்கிற போது, நஷ்டத்தைக் குறித்த கவலை காணாமல் போகிறது. இது மனித வாழ்கையின் தாத்பரியம்.இந்த தாத்பரியத்தை ஒருவன் புரிந்து கொண்டால் கஷ்டங்களை சுலபமாக எதிர்கொள்ளும் பக்குவத்தைப் பெற்று விடுவான்.
“நிச்சயமாக துன்பத்துடன் இன்பமும் இருக்கிறது” என்ற அல்குர்ஆன் 94 வது அத்தியாயத்தின் 5 வது வசனம், நமக்கு இந்த தாத்பரியத்தை நன்கு புரிய வைக்கும். கஷ்டத்திலும்,கவலையிலும் சிக்கித் தவிப்பவர்களுக்கு இந்த வசனம்,கவலை போக்கும் சிறந்த மருந்தாக அமைகிறது. எத்தனையோ நோய்களுக்கு நிவாரணத்தைக் கண்டுபிடித்த இந்த உலகம், கவலையில் வீழ்ந்தவனுக்கு எந்த நிவாரணத்தையும் தரமுடியாமல் திணறி நிற்கிற போது, “கஷ்டம் வந்தால் நிச்சயம் மகிழ்ச்சியும் நம் வீட்டுக் கதவைத் தட்டும்” என்று கூறும் இந்த ஒற்றை வரி திருமறை வசனத்தின் வழியாக அந்த நிவாரணத்தை இஸ்லாம் தந்து விட்டது.
லுக்மான் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் தன் மகனை அழைத்துக் கொண்டு அவசரமாக ஒரு ஊருக்குப் புறப்படுகிறார்கள். வழியில் ஒரு காட்டுப் பகுதியில் மகனின் காலில் முள் ஒன்று தைத்து இரத்தம் வழிகிறது. கடுமையான வலி. நடக்க முடியவில்லை. சரி இன்றிரவு இங்கேயே பொழுதைக் கழித்து விட்டு வலி குறைந்ததும் பயணிக்கலாம் என்று அங்கு தங்குகிறார்கள். மறுநாள் காலையில் புறப்பட்டு அந்த ஊருக்கு சென்று பார்த்தபோது ஒரே மயானமாக காட்சி தந்தது . அன்று அதிகாலையில் நடந்த பூகம்பத்தில் அந்த ஊரே காணாமல் போயிருந்தது.
மகனே! ஒருவேளை உன் காலில் முள் குத்தாமல் இருந்திருந் தால் நாமும் பூமிக்குள் புதையுண்டிருப்போம் என்று க்மான் {அலை} அவர்கள் தன் மகனிடம் கூறிய வரலாறு, இந்த வசனத்தின் உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
நம் வாழ்க்கையில் துன்பங்களையும்,கவலைகளையும் அள்ளித் தெளிப்பது இறைவனின் விருப்பமல்ல.மாறாக இன்பங்களை நாம் முழுமையாக விளங்குவதற்காகத் தான் துன்பங்களைத் தருகிறான். நிழலின் அருமையை விளங்குவதற்கு வெயில் தேவைப்படு வதைப் போல, இன்பங்களின் யதார்தத்தைப் புரிய வைப்பதற்கு துன்பங்களும் தேவைப் படுகிறது என்ற உண்மையை நாம் புரிய வேண்டும்.
கஷ்டம் என்பது நமது வாழ்வில் இல்லாது விட்டால் வாழ்க்கை யில் உருவாகும் மகிழ்ச்சி சுவையாக இருக்காது. வீழாமல் இருப்பது பலம் அல்ல. மீண்டும் மீண்டும் வீழ்ந்து தைரியமாக எழுந்து நடப்பதில் தான் உண்மையான பலம் அடங்கியுள்ளது. கஷ்டங்கள், துன்பங்கள் நேர்ந்த போது மனம் தளர்ந்து விடாமல் அவற்றைத் திராணியோடு எதிர்த்து நின்று போராடிப் பெறும் இன்பம் தான் வாழ்வில் நிலையான இன்பம்.
ஆக துயரங்கள் நம்மை சூழ்கொள்கிற போது, துவண்டு விடாமல் “நிச்சயம் இதற்குப் பின்பு மகிழ்ச்சி பிறக்கும்” என்ற உண்மையை உணர வைக்கிற இந்த வசனத்தைப் படித்துப் பார்த்தால் நிச்சயம் மலை போன்ற அந்த துயரங்கள் கடுகைப் போன்று சிறுத்து விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இறைவன் அல்லாஹுத்தஆலா துயரங்களை சகித்துப் பொருமை கொள்கிற பக்குவத்தை நமக்கு வழங்குவானாக! ஆமீன்.
மேலும் லுக்மான் அலைஹிஸ்ஸலாம்
அவர்களின் அழகிய வரலாறு குர்ஆனில் உள்ளது நீங்களும் படித்துப் பாருங்கள் இன்ஷா அல்லாஹ்
சில மார்க்க அறிஞர்கள் பெரும்பாலோரின் கருத்து படி லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நபித்துவத்தை பற்றி ஸஹிஹான ஆதாரம் குரான் மற்றும் ஹதீஸ் இல் இல்லாததால் அவரை நபி என்று ஏற்காமல் அவரை அல்லாஹுவின் நல்லடியார்கள் பட்டியலில் வைத்துள்ளனர். ஆகவே லுக்மான் கண்ணியமிக்கவர், சிறப்புக்குரியவர், நல்லவர், அல்லாஹுவின் நல்லடியார். என்று குறிப்பிட்டு இருக்கின்றார்கள். லுக்மான்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்உழைப்பை ஆக்கிக் கொண்டனர். அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.
.இன்ஷாஅல்லாஹ் அடுத்து வரும் பதிவுகளில் ஏனைய நபிமார்கள் வரலாறு பற்றி காண்போம்.
யா அல்லாஹ் நாங்கள் எதனை அறிய முற்பட்டோமோ அதனை எங்களுக்கு மேலும் மேலும் தெளிவு படுத்துவாயாக ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு வலுவான ஈமானை வழங்குவாயாக ஆமீன்
வாஹிர்தவான அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
நன்றி https://www.facebook.com/ Tamil Flash
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment