Friday, May 22, 2020

மணலுக்கு பதில் எம்சாண்ட்[ Manufacture Sand_ Msand] உபயோகித்தால் கட்டிடம் உறுதியாக இருக்குமா ?



Majestic Builder
மணலுக்கு பதில் எம்சாண்ட்[ Manufacture Sand_ Msand] உபயோகித்தால் கட்டிடம் உறுதியாக இருக்குமா ?

தற்பொழுது நம்மிடையே உள்ள பெரிய கேள்வி.? இது. அதற்க்கான பதிவு இது.

பயனுள்ளதாக இருந்தால் கமென்ட் செய்யவும்


மணல் என்பது நதி நீர், மலைக் கற்களை, தன் அசுர வேக ஓட்டத்தில் தூள் தூளாக்குவதால் இயற்கையாகப் பல வருட காலத்தில் உருவாகுவது.சன்னமானது.

எம் ஸாண்ட் என்பது கற்களை மனிதன் பொடி செய்வது. இது மணலைப் போல சன்னமானது அல்ல.கரடு முரடானது.

கான்கிரீட் என்பது மண், ஜல்லி, சிமெண்ட், நீர், ஆகியவை சேர்ந்த ஒரு கலவை ஆகும்.
இதில் சிமெண்ட் ஒரு பசை போல செயல்பட்டு மண் மற்றும் ஜல்லி கற்களை பிடித்து கொள்கிறது.



நீர் புகாத முறையில் இவை அனைத்தும் சேர்ந்து ஒரு வேதி வினையை நிகழ்த்துகிறது.

இதில் மணல் என்பது ஜல்லி கற்களுடன் ஒட்டி பிடிக்க பயன்படுத்தும் பொருள் தான்.

எம் ஸாண்ட் சேர்த்த சிமெண்ட் கான்க்ரீட் கலவையில் உறுதியில் குறைவிருக்காது. ஆனால், உதாரணமாக
X கன.மீ. சிமெண்ட்+ Y கன.மீ. மணல்
என்று நாம் ஒரு கலவை தயார் செய்கிறோம்.

அதே போல்
X கன.மீ. சிமெண்ட்+ Y கன.மீ. எம் ஸாண்ட் என்று இன்னொரு கலவை செய்கிறோம்

. இரண்டாவது (எம் ஸாண்ட்) கலவைக்குள் சிறு சிறு இடைவெளிகள் ஏராளமாக இருக்கும்.
மணலைப் போல் இறுக்கமாக இருக்காது.

அதே அளவு X+Y கன.மீ. கான்க்ரீட் கலவை தயாரிப்பதற்கு, அந்த இடைவெளிகளில் நீர் அதிகம் நிரப்ப வேண்டும் அல்லது சிமெண்ட் அதிகம் தேவைப்படும்.

MSAND இன் அதன் தரத்தை உறுதி செய்து கொள்ளவும். சந்தையில் தரமற்ற Msand வலம்வருகின்றன.

Msand பயன்படுத்தஅதனுடன் மர்கெட்டில் கிடைக்கும் வேதியல் பொருளை 1 சிமெண்ட் மூடைக்கு 100 அல்லது 200 ml என்ற விகித்தில் கான்கிரீட் கலைவயில் சேர்த்து கொள்ளுங்கள்.

MSAND பயன்படித்தலாமா எனில் பதில் நீங்கள் தாராளமாக Msand பயன்படுத்தலாம்.

No comments: