Monday, May 25, 2020

சில மேன் மக்கள்

Vavar F Habibullah
என்னை விட வயதில் மூத்த
சீனியர் பெருமக்களிடம் மட்டுமே
பண்டிகை தினங்களில் பேசி
அவர்கள் நலம் விசாரித்து
மகிழ்வது எனது சமீபத்திய இயல்பு.

ஒளிவு மறைவின்றி அவர்கள்
பேசிடும் வாழ்க்கை நெறிகளில்
எவ்வித கலப்படமும் இல்லை.
யதார்த்த மனித வாழ்க்கையின்
பிரதிபலிப்புகளை அவர்களின்
வார்த்தைகளில் உணர முடியும்.
குடும்ப உறவுகளில் இருந்து
முதுமை மற்றும் இயலாமை
காரணமாக சற்று ஓரம் கட்டப்
பட்ட போதிலும் உடன் வாழ்ந்து
வரும் நட்பு வட்டமே இவர்கள்
சுவாசிக்க உதவும் ஆக்ஸிஜன்
சிலிண்டர்கள் போல் உதவுகிறது.



தங்களின் வசந்த காலங்களில்
பூத்து குலுங்கி மக்களை வசீகரித்த
இந்த அருமலர்கள் இப்போது
தங்கள் வாசனையை இழந்து
வாடி நின்றாலும் அன்று பரப்பிய
அந்த வாசனை, மண் வாசனையாகி
இன்றும் அன்றடரந்த மலர் போல்
அறிந்தவர் நெஞ்சங்களில் நிழல்
படிவங்களாக உரைந்து கிடந்து
அவ்வப்போது உணர்ச்சி மேலீட்டால்
பற்றி எரிகிறது. புகை கலந்த
வாசனை மட்டும், மாசின்றி
இயற்கையாய் இருக்கிறது.

சோஸியல் மீடியாக்களில்
இந்த பெரிய மனிதர்கள்
இருந்தாலும் அலைபேசியில்
நீண்ட நேரம் உரையாடி மகிழ்
வதே இவர்களின் இயல்பாக
இருக்கிறது.

நேற்று இரவு, சென்னை
நியூ காலேஜ் முன்னாள்
தமிழ்த்துறை தலைவர்
பேராசிரியர் குளச்சல்
சாகுல் அமீது அவர்களுடன்
நீண்ட நேரம் பேசிக் கொண்டி
ருந்த போது அவர் கேட்டார்...
என்ன டாக்டர்!
இப்போது
பேஸ்புக்கில் எழுதுவதை
நிறுத்தி கொண்டீர்கள்...!
கொரோனா பற்றி நீங்கள்
தரும் மருத்துவ தகவல்கள்
என் போன்றோருக்கு எவ்வளவு
பயன் தரும் தகவல் தெரியமா
எழுதுங்கள் டாக்டர்
என் போன்றோருக்காக
தொடர்ந்து எழுதுங்கள்!
நான் லைக் செய்வதில்லை
ஷேர் செய்வதில்லை...
ஆனால் உங்கள் எழுத்தை
ஆர்வத்துடன் படிப்பேன்
ஒரு சீனியர் தமிழ் அறிஞரின்
உற்சாகமூட்டும் வார்த்தைகள்
ஒரு மருத்துவருக்கான நல்ல
டானிக் என்று சொல்லி...
லைக் தராமலே நம்மை
விரும்பும் சில பெரிய
மனிதர்களும் நமது நட்பு
வட்டத்தில் இருக்கிறார்கள்
என்பது மகிழ்ச்சி தருகிறது.

சில முன்னாள் பிரபலங்களின்
மொபைல் நம்பர் இருக்கிறது.
என்ன முயன்றும் தொடர்பு
கொள்ள இயலவில்லை.
தொடர்பு எல்லைக்கு வெளியே
சிலர்....திஸ் நம்பர் டஸ்ன்ட்
எகசிஸ்ட் நிலையில் சிலர்
சைலண்ட் மோடில் சிலர்
எங்கே இந்த முன்னாள்
விஐபிக்கள்....நண்பர்கள்!
புரிந்து கொள்ள முடியாத
நிலையில் இவர்கள்...
வேடிக்கையான உலகம்
வினோதம் தரும் இவர் தம்
செயல் பாடுகள்....
Corona world
The Naughty world.
At least at the moment
be satisfied that
‘People who like you
are more important than
People who like your post.

’Vavar F Habibullah

No comments: