Monday, May 11, 2020

Allahu Akbar, Allahu Akbar, அல்லாஹு அக்பர் , அல்லாஹு அக்பர் ,

பாங்கின் ஓசை ஒலிக்கிறது அது பாங்காய் காதில் கேட்கிறது.
===================
”அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் - இறைவன் மிகப் பெரியவன் இறைவன் மிகப் பெரியவன்

அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ் – இறைவன் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சி கூறுகிறேன்

அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ் - இறைவன் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சி கூறுகிறேன்

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் – முஹம்மது இறைவனின் தூதர் என்று சாட்சி சொல்கின்றேன்

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் - முஹம்மது இறைவனின் தூதர் என்று சாட்சி சொல்கின்றேன்


ஹய்ய அலஸ்ஸலாஹ் – தொழுகைக்கு விரைந்து வாருங்கள் ஹய்ய அலஸ்ஸலாஹ் - தொழுகைக்கு விரைந்து வாருங்கள்

ஹய்ய அலல்ஃபலாஹ் – வெற்றியின் பக்கம் வாருங்கள் ஹய்ய அலல்ஃபலாஹ் - வெற்றியின் பக்கம் வாருங்கள்

அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – இறைவன் மிகப் பெரியவன் இறைவன் மிகப் பெரியவன் லா இலாஹ இல்லல்லாஹு - இறைவன் ஒருவனைத் தவிர வேறு கடவுள் இல்லை.

அதிகாலை தொழுகைக்காக (சுப்ஹ்) அழைப்பு விடும்போது கீழ்வரும் வரிகளை இணைத்து அழைப்பு விடுவர்.

அஸ்ஸலாத்து ஹைரும் மினன் நெளம் - அஸ்ஸலாத்து ஹைரும் மினன் நெளம்

(பொருள்: தூக்கத்தை விடத் தொழுகை மேலானது)

பாங்கிற்குப் பிறகு சலவாத்து மற்றும் துஆ செய்தல்
'அல்லாஹூம்ம ரப்பஹாதித் தஃவதித் தாம்மத்தி வஸ்ஸலாதில் காயிமத்தி ஆத்தி முஹம்மதினில் வஸீலத்த வல்ஃபளிலத்த வப்அஃத்ஹூ மகாமன் மஹ்மூதினில்லதி வத்ததஹ்'

பொருள்: பரிபூரணமான இப்பிரார்த்தனைக்கும், நிரந்தரமான தொழுகைக்கும் உரிய இரட்சகனே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு சுவர்க்கத்தில் உள்ள வஸீலா எனும் உயர்வான அந்தஸ்த்தையும் சிறப்பையும் வழங்குவாயாக![2]

பாங்கு அல்லது அதான் (அரபு மொழி: أَذَان [ʔaˈðaːn]) (also called in Turkish: Ezan)[1] என்பது இசுலாமியர்களின் தொழுகைக்கான அழைப்பு ஆகும். ஒரு நாளில் ஐந்து முறை அதான் விடுக்கப்படும். பாங்கு என்பது பாரசீகச் சொல்லாகும். அதான் [அரபி:أذان] என்பது அரபிச் சொல்லாகும். பாங்கு சொல்வதற்காக நியமிக்கப்படுபவர் முஅத்தின் என்று அழைக்கப்படுகிறார். முன்பு உயரமான இடங்களில், மலைக்குன்றுகளில் பாங்கு சொல்வார்கள். இக்காலங்களில் ஒலிபெருக்கிகளைப் பள்ளிவாசல்களில் பொறுத்தி அழைக்கிறார்கள்.

முஸ்லிம்கள் மெக்காவிலிருந்து மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படவில்லை. அவர்கள் ஒன்று கூடி தொழுகைக்கான நேரத்தை முடிவு செய்தனர். முஸ்லீம்கள் எண்ணிக்கையில் அதிகமான போது, அவர்கள் அறிந்திருக்கிற ஏதாவது ஒரு முறையில் தொழுகையின் நேரத்தை அறிந்து கொள்ள ஆலோசித்தனர். ஆலோசனையின் போது சிலர் நெருப்பை மூட்டலாம் என்றும் சிலர் மணி அடிக்கலாம் என்றும் கூறினர். ஆனால் இவையெல்லாம் மறுக்கப்பட்டன. அப்போது உமர் (ரலி) தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை ஏற்படுத்தக் கூடாதா?’ என்றார். உடனே பிலால் (ரலி) அவர்களிடம் ‘பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்” என்று முகம்மது நபி (ஸல்) கூறினார்.
https://ta.wikipedia.org/

No comments: