எத்தனை தடைகள் இடையூறுகள் வந்தாலும் அது குரோணா வழிவந்தாலும் மார்க்க கடமையை நிறைவேற்றுவதில் தடையாக முடியாது. அதிலும் சில நன்மையான காரியங்களை உருவாக்கும். கடந்த நோன்பு காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பல இமாம்களை உருவாக்கியது. எங்கள் வீட்டிலேயே சிறுவர்கள் இமாமாக இருந்து தொழுகையை நடத்தி வைத்தது மிகவும் மகிழ்வைத் தந்தன. சிறவர்கள் அனைத்து நோன்பையும் ஆர்வமாக நோற்று தங்கள் கடமையை நிறைவேற்றினார்கள். எங்கள் எதிர் வீட்டில் பள்ளி இமாம் குடி இருப்பதால் அவரிடம் தங்களது மார்க்க சம்பந்தப்பட்ட சந்தேகங்களை கேட்டும் தெரிந்துக் கொண்டார்கள். பெருநாள்
தொழுகையை தான் தொழவைப்பதாக எனது பேரன் விரும்பினான். இறைவன் அருளால் எதிர்வீட்டு இமாம் சுஹைப் ஹஜ்ரத் அவர்கள் இமாமாக இருந்து எங்கள் அண்ணன் வீட்டில் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினோம். அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே
தாங்களும் துவா செய்யுங்கள்.
No comments:
Post a Comment