Tuesday, May 26, 2020

பேஸ்புக் தந்த ஒரு அறிமுகம்

·
Vavar F Habibullah

ஒரு காலத்தில் சென்னை
அசோக் நகர் எனது மருத்துவ
மனையின் தலைமையகமாக
இருந்த போது.....
வாரம் தோறும் நிகழும்
மருத்துவம் சார்ந்த கட்டுரை
கேள்வி பதில் சம்பந்தமாக
தினத்தந்தி, தினகரன், ராணி
வாசுகி போன்ற அன்றைய
பிரபல மூத்த பத்திரிகையாளர்
களுடனான அறிவியல் ரீதியான
சந்திப்பு, எழுதுவதில் ஒரு தனி
ஆர்வத்தை என்னுள் நிகழ்த்தியது
எனலாம். அப்போதெல்லாம்
பெரும்பாலான தமிழ் பத்திரிகை
களில் எனது மருத்துவ
கேள்வி பதில் நிகழ்ச்சிகள்
இடம் பெறும்.


இப்போது வயதாகி விட்டதால்
சொந்த ஊரான நாகர்கோவில்
தனது மண்ணின் மைந்தனை
மானசீகமாக ஏற்றுக் கொண்டது.
சொந்த ஊர் என்பதாலும்
பழைய பழுத்த டாக்டர்
என்பதாலும் என்னை புரிந்தவர்
களுக்கு என் மீது மிகுந்த பாசம்
உண்டு.என் வார்த்தைகளில்
முழு நம்பிக்கை உண்டு.எனவே
தான், ஓய்வின்றி மருத்துவப்பணி
மட்டும் இன்றும் தொடர்கிறது.
எனது பிள்ளைகள் நான் முழு
ஓய்வில் இருப்பதையே விரும்பு
கிறார்கள்.

பேஸ்புக், என்னை பொறுத்த வரை
நான் எழுதும் கருத்துக்களை
நண்பர்கள் புரிந்து கொள்ள
உதவும் ஒரு ‘ரைட்டிங் டூல்.’
பத்திரிகை போல், சென்சார்
இல்லை என்பதால் விரும்புவதை
எழுத முடிகிறது.மருத்துவ
விசயங்களை தாராளமாக
எழுத முடிகிறது.

என் பதிவுகளை பேஸ்புக்கில்
பார்க்கும் நண்பர் குளச்சல்
அஜீம்....டாக்டர், நீங்கள் ஏன்
பத்திரிகைகளில் எழதக்கூடாது
என்று அடிக்கடி கேட்பதுண்டு.
ஆனால் நேற்று இரவு...
ஒரு மொபைல் கால்..நண்பர்
அஜீம் தான் பேசினார்..டாக்டர்
குழந்தைகள் தடுப்பு மருத்துவம்
Immunisation schedule
பற்றி கொரோனா நேரத்தில்
நீங்கள் பேஸ்புக்கில் எழுதிய
தகவல்கள் மிகவும் பயனுள்ளவை.
அதை எனது நண்பர் ‘தி ஹிந்து
தமிழ்’ பத்திரிகையாளர் சுவாமி
நாதன் தனது பத்திரிகையில்
வெளியிட அநுமதி கேட்கிறார்.
பிளீஸ் அவரிடம் பேசுங்கள்
என்றார். இன்று காலையில்
நண்பர் சுவாமிநாதன் எனது
பெர்மிசனை போன் மூலம்
கேட்டு பெற்றார்.அதோடு
நிற்காமல் அதை உடனடியாக
பிரிண்டிலும் கொண்டு வந்து
விட்டார்.நண்பர்கள் இருவரும்
என் மீது கொண்டுள்ள அன்பு
பற்று பாசம் எல்லாம் என்னை
மகிழ்ச்சி கடலில் தள்ளுகிறது
என்று கூறி....பேஸ்புக்கில்
நல்ல தகவல்களை தந்தால்
ஹிந்து போன்ற பத்திரிகைகள்
அதை பிரசுரிக்கும் என்ற
தகவலையும் கூறி நண்பர்களை
வாழ்த்தி மகிழ்கிறேன்.


Hindu Tamil Article

Vavar F Habibullah

No comments: