‘அல்லாஹ்வை வணங்க வா’ எனும்
அழைப்பொலி கேட்குமுன்
அதிகாலையில்
அடுப்பங்கரையில் கேட்கும்
அவள் புழக்கம் !
‘அங்கிட்டு’ பிள்ளைகளை எழுப்பிவிட்டு
‘இங்கிட்டு’ இவரை உசுப்பிவிடனும்
இதற்கிடையே
‘உங்கிட்டு’ பால் பொங்கி அழைக்கும் !
அலாரம் அலறினாலும்
அசைந்து கொடுக்காத குடும்பத்தை
அவள்
மிக்ஸி எழுப்பிவிடும் !
பள்ளிக்கும்
அலுவலகத்திற்கும்
அனுப்பிவிட்டு ஆசுவாசிக்க
அந்நாள் விடிந்துவிடும்
அழகாய் !
“ஆமா
இவங்க பாத்ரூம் தனி ...
பிள்ளைகளுக்கு தனி.....
என் பிரஷ்தான்
அங்கிட்டும் இங்கிட்டும்
மாறி மாறி அல்லல் படும்”
“ஆஹா...
அழகியல் !
அன்பை ஈந்தவருக்கும்
அன்பால் ஈன்றவர்களுக்கும்
மத்தியில்
...
இருப்பதில்
இருக்கிறது
வாழ்நாளின் சுவர்க்கம் !
No comments:
Post a Comment