Dr.Vavar F Habibullah
டாக்டர்...
ஒரு கருத்தரங்கில்
பேச வேண்டும்.இஸ்லாம்
பற்றி சற்று சொல்லுங்களேன்.!
“ஐ நோ எவரி திங் அபவ்ட்
இஸ்லாம்...பட் த மோஸ்ட்
இம்பார்டண்ட் டிஃபரென்ஸ்
ஒன்லி...ஜஸ்ட் இன் ஃபியூ
வேர்ட்ஸ்....கேன் யூ!”
அருட் தந்தை குரூஸ் அவர்கள்
என்னிடம் சமீபத்தில் கேட்டார்.
அவர் இறையியல் கல்லூரி
தத்துவ பேராசிரியர் மற்றும்
அகத்திய முனி மருத்துவமனை
தலைவர் ஆவார்.
நான் பேசப் போவதை சற்று
உன்னிப்பாக கவனத்துடன்
கேட்க துவங்கினார் ஃபாதர்.
நம்பர் ஒண் ஃபாதர்...
இஸ்லாத்தில் சிலை வணக்கம்
என்பது இல்லை.சிலை வணக்கம்
புரிவது மகா குற்றம்.
“கடவுள் இல்லை...!
இல்லவே இல்லை...!!
இறைவன் ஒருவனைத் தவிர!!!”
இது தான் இஸ்லாத்தின்
தாரக மந்திரம்.இப்படி மனதால்
மட்டுமே, எவராவது நினைத்தால்
கூட அவர் முஸ்லிமாகி விடுகிறார்.
இதைத்தான் ‘ஈமான்’ அல்லது
நம்பிக்கை என்று சொல்வார்கள்.
அப்படியா! ஆச்சரியமா இருக்கே!
நம்பர் டூ ஃபாதர்...
நோ கம்பல்சன் இன் ரிலிஜியன்!
அதாவது கட்டாய மதமாற்றம்
என்பது இஸ்லாத்தில் அறவே
இல்லை.இறைவன் நாடினால்
ஒழிய.. ஒருவர் முஸ்லிம் ஆக
முடியாது என்பது இறை
வகுத்த அடிப்படை இறை விதி.
“உங்களுக்கு உங்கள் மதம்
எங்களுக்கு எங்கள் மதம்”
என்பது தான் திருக்குர்ஆன்
தீர்க்கமாக சொல்லும்
மத நல்லிணக்க தத்துவம்.
வெரி இண்டரஸ்டிங் பாயிண்ட்
நம்பர் திரீ ஃபாதர்...
மனிதன் எவ்வளவு தான்
முயன்றாலும் அவனால்
கடவுள் நிலைக்கு உயர
முடியாது. ஞானியும்,
மகாஞானியும் கூட
சாதாரணமாக இறந்து
போகும் மனிதர்களே....!
எனவே இஸ்லாத்தில்,
மனிதன் தன்னை கடவுள்
என்று பிரகடனம் செய்வது
மன்னிக்க முடியாத பெருங்
குற்றம். இஸ்லாமிய நாடுகள்
இந்த குற்றம் புரிந்தவருக்கு
மரண தண்டனை வழங்கும்.
நம்பர் ஃபோர் ஃபாதர்
இஸ்லாத்தில் துறவறம்
என்பது அறவே இல்லை
இல்லறமே நல்லறமாகும்.
நம்பர் ஃபைவ் ஃபாதர்
வெரி இம்பார்டண்ட் பாயிண்ட்
மனிதன் ஒரு போதும்
இறைவனை தேடி
அலைய முடியாது.
காரணம் இறைவனே
மனித செயல்களை
உற்று நோக்குவதால்....
பயங்களில் தலையாயது
மரண பயம் மட்டுமே!
“எல்லா ஆத்மாவும் மரணத்தை
சுவைத்தே தீர வேண்டும்”
என்பது குர்ஆன் வசனம்
என்பதால், தவறுக்கும்
தவறான தவறுகளை செய்து
விட்டு, உலகில் தப்பி விடலாம்
என்று மனிதன் நினைப்பது
முடியாத விசயம்.மரணமே
உலகில் இறை தண்டனை
என்பதால் (மரணம் எப்போது
எங்கே, எப்படி, எதனால் எந்த
வடிவில் நிகழும் என்பது மனித
அறிவுக்கு தெரியாத ரகசியம்
என்பதால்)இறை அச்சம் தேவை
என இஸ்லாம் போதிக்கிறது.
நியாயம்,தீர்ப்பு என்பது எல்லாம்
மரணம் போதிக்கும் நீதிகளே.
ரெம்ப இண்டரஸ்டிங் மற்றும்
மிகவும் பயனுள்ள தகவல்
டாக்டர்...! தேங் யூ.
Someone asked
George Bernard Shaw
Sir,what is your opinion
about ISLAM...He said,
The best religion
The worst followers
Dr.Vavar F Habibullah
No comments:
Post a Comment