மாயவரம் என்னும்
ஒரு கலாச்சாரம் நிறைந்த நகரம்
பிரிக்கப்படாத
தஞ்சாவூர் ஜில்லாவில்
மாயவரம் ஒரு முக்கியமான
வியாபாரஸ்தலம்
கும்பகோணம்
மாயவரம்
இந்த இரு நகரங்களும்
தஞ்சை ஜில்லாவின்
இரு கண்கள்
ஒரு காலத்தில் சித்தர்கள்
அதிகம் இருந்ததால்
அது சித்தர்காடு என்று அழைக்கப்பட்டது
அது இப்போது
சித்தாக்காடு ஆயிற்று
மறை ஓதும் அந்தணர்கள்
அதிகம் வசித்ததால்
இந்த பகுதிக்கு
மறையூர் என்று பெயர்
மூவலூர்
சித்தாக்காடு
மறையூர்
இவைகள் மாயவரத்தின்
மேற்குப் பகுதியின்
துவக்கம் ஆகும்
வெள்ளிக்கிழமை தோறும் கூடும்
சித்தாக்காடு சந்தை
இங்கே எல்லா பொருட்களும்
விற்கப்படும்
சட்டிப் பானைகள்
விளக்குமாறு
அறுவடை செய்ய உதவும்
கதிர் அரிவாள்
துணிமணிகள்
காய்கறிகள்
பழங்கள்
ஆடு மாடுகள்
குதிரைகள்
என்று பொருட்கள்
அதிகம் விற்கப்படுவது
தரங்கம்பாடி ஸ்பெஷல்
கருவாடுகள் தான்
மயிலாடுதுறை ஒரு கருவாட்டுச் சந்தை
இந்த சந்தை
தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முதலாவது
கருவாட்டுச் சந்தை ஆகும்
இது துவக்கப்பட்டு நூற்றாண்டுக்கு மேலாகிறது
தரங்கம்பாடி
கடற்கரையிலிருந்து
இருபது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது மாயவரம்
இது அனைத்து மீனவர்களுக்கும் பொதுவான
ஒரு இடமாகும்
வெளியூர் வியாபாரிகள் எளிதில் வந்துபோகும் இடமாகவும் இருக்கிறது
இந்தச் சந்தை மயிலாடுதுறை தொடர்வண்டி நிலையத்துக்கு பக்கத்திலே உள்ள சித்தாக்காடு என்னும் இடத்தில் இருக்கிறது
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று சந்தை கூடுகிறது
அன்று சுமார் ஐயாயிரம் பேர் இந்தச் சந்தைக்கு வருகின்றனர்
சுமார் ஐந்து லட்ச ரூபாய்க்கு வணிகம் நடக்கிறது
சந்தை ஞாயிறு அன்றுதான் என்றாலும் சனிக்கிழமை பின்னிரவு
இரண்டு மணிக்கே வியாபாரம் தொடங்கி விடும்
இராமநாதபுரம்
புதுக்கோட்டை
தஞ்சாவூர்
திருவாரூர்
கடலூர்
நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த
கருவாட்டு வியாபாரிகள்
இங்கு வியாபாரத்துக்கு வருகிறார்கள்
கோவை
கரூர்
திருச்சி
தஞ்சாவூர்
சேலம்
திருவண்ணாமலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கருவாட்டுக் கொள்முதலுக்காக இங்கு குவிகிறார்கள்
இரவு இரண்டு மணிக்குத் தொடங்கி அதிகாலை
ஆறு மணிக்குள் மொத்த வியாபாரத்தை முடித்துக் கொண்டு
பெரிய வியாபாரிகள் புறப்பட்டுவிடுகின்றனர்
அதன்பிறகு சிறு வியாபாரிகள் காலை ஐந்து மணிக்கு
கடை விரித்து
பத்து மணிவரையும்
இதற்குப் பிறகு
சில்லறை வியாபாரம்
மாலை வரை நடக்கிறது
சந்தை முடிந்து அடுத்த
சந்தை கூடும் வரை
ஒரு வாரம்
கருவாட்டு நறுமணம்
இங்கே வியாபித்திருக்கும்
இந்த பக்கமாக செல்லும்
சைவ உணவு
பஸ் பயணிகள் நிலமை பரிதாபம்
இவர்கள்
துணியால் மூக்கை மறைத்து
ப்ராணாயாமம் செய்வார்கள்
அதனால் இவர்களுக்கு
ஆரோக்யம் அதிகரிக்கும் என்று
சித்தவைத்தியர் சொல்வார்
மாயவரம் ஜங்ஷன்
திருச்சியை விட்டால்
அடுத்து
இஞ்சினுக்கு தண்ணீர் பிடிக்கும் வசதி கொண்ட ரயில் நிலையம்
மாயவரம்
இங்கே
மாலை ஆறு மணிக்கு
திருச்சி தஞ்சாவூர் கும்பகோணத்திலிருந்து
சென்னை செல்லும் ரயில்
திருவாரூரில் இருந்து
வரும் ரயில்
தரங்கம்பாடியிலிருந்து
வரும் ரயில்
இவைகள் மாயவரம் ஜங்ஷனில்
வந்து சேரும்
இரவு பத்து மணிக்கு
போட் மெயில் ரயில் வரும்
ரயிலடி அருகே
ஒரு சிறு ராமர் கோயில்
சக்தி வாய்ந்த
ஆஞ்சநேயர் சந்நிதி
அலுமினியம் தகரம் கொண்டு கட்டிய
டவுன் பஸ்
இதில் முகம் பார்க்கலாம்
தலை சீவலாம்
ரெயிலடி ஜங்ஷன்
காவேரி நகர்
மாமரத்து மேடை
கொட்டாஞ்கச்சி செட்டியார் தெரு
சம்மந்தன் குளம்
முனிசிபல் ஹைஸ்கூல்
சுந்தரம் தியேட்டர்
பஸ் ஸ்டாண்ட்
மணிக்கூண்டு
மகாதேவன் தெரு
பட்டமங்கலத் தெரு
நேஷனல் ஹைஸ்கூல்
அந்த காலத்தில்
மதராஸ் ராஜதானியின்
திருநெல்வேலி உயர்நிலைப்பள்ளி
திருச்சி ஜோசப் உயர்நிலைப்பள்ளி
மன்னார்குடி ஃபின்லே பள்ளி
மாயவரம் நேஷனல் ஹைக்கூல்
ஆகியவை
சிறந்த உயர்நிலைப்பள்ளிகளாக இருந்தன
நல்ல தரம்
ஒழுக்கம்
பண்பாடு
கற்றவன் என்ற பெருமை
பெற்றவர்களின் முகத்தில் பூரிப்பு
இவைகள் இருந்தன
நடராஜ ஐயர்
ஷார்ட் ஹான்ட் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்
இங்கே ஷார்ட் ஹான்ட் (சுருக்கெழுத்து)
பயின்ற பலர்
டெல்லி தெற்கு வளாகத்தில்
நாடாளுமன்ற கூடத்தில்
நேருவிற்கு காரியதரிசியாக
வேலை செய்திருக்கிறார்கள்
காவேரிக்கரை
திருஇந்தளூர்
ரங்கநாயகி - பரிமளரங்கன்
திருக்கோயில்
நந்தனாருக்காக
நந்தி ஒதுங்கி வழிவிட்ட
திருப்பூன்கூர் சிவ ஸ்தலம்
நீடூர்
வடகரை
இவைகள்
மாயவரத்தின் வடக்கு எல்லை
தெற்கே
தர்மபுரம் ஆதீனம் மடம்
அபயாம்பிகை-மயூரநாதஸ்வாமி திருக்கோயில்
ஆக்கூர்
மண்ணம்பந்தல் ஏவிசி காலேஜ்
சப் ஜெயில்
தாசில்தார் அலுவலகம்
கோமதி தியேட்டர்
நீடூர் டு மூவலூர்
இரண்டாம் நம்பர் டவுன் பஸ்
காளியாகுடி ஹோட்டல்
துணிமணி
நகைக்கடைகள்
மாயவரம் மல்லிகைப் பூ
மாயவரம் மாம்பழம்
பெரியகடைவீதி
பட்டமங்கலத் தெரு
மகாதானத் தெரு
காந்திஜி சாலை
பூக்கடைத் தெரு போன்ற இடங்களில் பரவலாக
மாம்பழம் வியாபாரம்
களைகட்டும்
இந்த மாம்பழத்தோட
தனித்தன்மை முக்கியமானது
பொதுவா மாம்பழம் நாள் ஆகிட்டா அழுகிடும்
ஆனா
இந்த மாம்பழம் மட்டும் அழுகாது
தோல் மட்டும் சுருங்கும்
கொஞ்சம் சுவையில வித்தியாசம் தெரியும்
169 வருஷத்துக்கு முன்னால, உருவான இந்த ரக மாம்பழம்
இப்போது
நாகப்பட்டினம் மாவட்டத்தை தாண்டி வளர்ந்து நிற்கிறது
பஸ் ஸ்டாண்ட் உள்ளே
அமைந்திருக்கும்
பழக்கடைகள்
பூக்கடைகள்
மலர் மாலைகளை
சுற்றிப் பறக்கும் வண்டுகள்
கோரைப்பாய்
ஜமக்காளம்
வியாபாரப் பொருட்கள்
மளிகைப் பொருட்கள்
மொத்த விலை சந்தை
இவைகள் எல்லாம்
மாயவரத்தின் அடையாளங்கள்
ஐப்பசி மாத கடமுழுக்கு
தீபாவளிக்குப் பின்
முடவன் முழுக்கு
விசேஷப் பண்டிகைகள்
ஐம்பதுகளில்
இங்கே
இரண்டு சினிமா தியேட்டர்கள் இருந்தது
சுந்தரம் தியேட்டர்
இங்கே
சிவாஜி கணேசன் நடித்த படங்கள்
திரையிடுவார்கள்
கோமதி தியேட்டர்
இங்கே
எம்ஜிஆர் நடித்த படங்கள்
திரையிடுவார்கள்
திருவாரூர்
நாகப்பட்டினம்
தரங்கம்பாடி
ஆகிய ஊர்களில் இருந்து
ரசிகர்கள்
சைக்கிளில் சினிமா பார்க்க
வருவார்கள்
எங்கள் கிராமத்தில் இருந்து
சைக்கிளில்
ஆடிக்காற்றை கிழித்துக் கொண்டு
எதிர் பெடல் செய்து
மாயவரம் செல்வது
ஒரு தனி அநுபவம்
உலகில் எத்தனை
நகரங்கள் இருந்தாலும்
எங்கள் மாயவரம் போல் ஆகாது
நன்றி :Mayiladuthurai -மயிலாடுதுறை
No comments:
Post a Comment