மக்களிடையே குழப்பம் விளைவிப்பதற்காக ஒருவர் கூறியதை இன்னொருவரிடம் சொல்வதே கோள் ஆகும். கோள் சொல்லித் திரிவதை சிலர் தொழிலாகக் கொண்டுள்ளனர். இது
மக்களிடையே விரோதத்தையும் குரோதத்தையும் மூட்டி விடுவதற்கும் அவர்களுக்கிடையே உள்ள நல்லுறவைத் துண்டிப்பதற்கும் மிகப் பெரிய காரணமாகும். இவ்வாறு செய்பவனை அல்லாஹ் இழித்துரைத்துள்ளான்:
“அதிகமாக சத்தியம் செய்கின்ற அற்பமான எந்த மனிதனுக்கும் நீர் அடங்கி விடாதீர். அவன் குறைகூறி திரிபவனாகவும் கோள் சொல்லித் திரிபவனாகவும் இருக்கின்றான்” (68:10,11) ‘கோள்ச் சொல்லித் திரிபவன் சொர்க்கம் செல்ல மாட்டான்’ என்பது நபிமொழி. அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி), நூல்: புகாரி.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ‘நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்த போது கப்றில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். (ஆனால்) ஒரு பெரிய விஷயத்திற்காக இவ்விருவரும் வேதனை செய்யப்படவில்லை என்று கூறிவிட்டு, ஆம்! (இதைத் தொடர்ந்து வேறொரு அறிவிப்பில் ‘அது பெரிய விஷயம் தான்’ என்று வந்துள்ளது) அவ்விருவரில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது (சிறுநீர் துளி தன்னில் படாமல்) பேணுதலாக இருக்கவில்லை. மற்றொருவர் கோள் சொல்லித் திரிபவராக இருந்தார் என்று கூறினார்கள். (புகாரி)
கோள் சொல்வதில் மிக மோசமானது கணவனைப் பற்றி மனைவியிடத்திலும், மனைவியைப் பற்றி கணவனிடத்திலும் குறை கூறித் திரிவதாகும். அவ்விருவருக்கிடையே உள்ள நல்லுறவைக் கெடுப்பதற்கான முயற்சியாகும் இது. அதுபோல பணியாளர்கள் தம் சக பணியாளர்களைப் பற்றி – அவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதற்காக – மேனேஜரிடம் அல்லது ஏனைய பொறுப்பாளர்களிடம் கோள் சொல்கின்றனர். இதுவும் மோசமானதாகும். இவையனைத்துமே விலக்கப்பட்டவையாகும்.
எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
https://www.islamkalvi.com/?p=1396
No comments:
Post a Comment