அந்த நாட்களில்...
எனது தந்தை, ஒரு செயின்
ஸ்மோக்கர்.இந்தியா வந்தால்
பெர்கலி தான் அவரது
பேஃவரைட் பிராண்ட்.
நான் தான் கார்ட்டன்
கார்ட்டனாக சிகரெட்
வாங்கி வந்து, அவரிடம்
கொடுப்பேன்.அப்போது
நான், ஒரு பள்ளி மாணவன்.
சிகரெட்டை மிகவும் ஸ்டைலாக
உதட்டில் பொறுத்தி,லைட்டரில்
பற்ற வைத்து புகையை உள்ளிழுத்து
நாசி வழி வெளிவிடும் அழகை நான்
பார்த்து ரசிப்பதை பார்த்து...
கேட்டாரே ஒரு கேள்வி !
“என்னை போல் உனக்கும்
சிகரெட் பிடிக்க ஆவலாக
இருக்கிறதா!”
பயந்து கொண்டே நான்
தலையை அசைத்தேன்.
“ஓகே,டேக் எ சிகரெட்”
அவருக்கே உரித்தான
ஆங்கிலத்தில் தான் பேசினார்.
நான் மெதுவாக
ஒரு சிகரெட் எடுத்தேன்...
உதட்டில் வைத்தேன்
அவர் தான் ஸ்டைலாக
லாவகமாக அதை பற்ற
வைக்க உதவினார்.
“ஓகே...நவ், டேக் த
ஸ்மோக் இன், ரைட்..
டேக் த ஸ்மோக் அவுட்”
அவ்வளவு தான்...
எனக்கு மூச்சுத் திணறியது.
இருமலுடன் சற்று புறை
ஏற,கண்களில் நீர் வடிய
நான் சிகரெட்டை தூக்கி
எறிந்தேன்.என்னை உற்று
நோக்கிய தந்தை கேட்டார்
“வாட் அபவ்ட் யுவர்
எக்ஸ்பீரியன்ஸ்”
எப்படி உங்களால் இப்படி
சிகரெட்டை ஊதி தள்ள
முடிகிறது.நான் அவரிடம்
தைரியமாக கேட்டேன்.
சிகரெட்டை ஒரு வெறுப்பு
பொருளாக, இன்று வரை
நான் கருத, அவர் அன்று
எனக்கு கொடுத்த அந்த ஷாக்
டிரீட்மெண்ட் தான் காரணம்.
‘எ சார்ட் ஆஃப்
பாசிடிவ் சைக்கலாஜி’
என்று சொல்லலாம்.
அந்த நாட்களில், எங்கள்
ஊரில் தியேட்டரில் போய்
சினிமா பார்ப்பது என்பது
கடுமையான குற்றம். நான்
சினிமா பார்க்க போய் வந்ததை
யார் மூலமோ அறிந்த அவர்
சொன்னார்....
தம்பி...ஊருக்கு நல் உபதேசம்
செய்யும் ஹாஜியாரால் தன்
மகனை திருத்த முடியவில்லை
என்று ஊரில் சொல்கிறார்கள்..
அவ்வளவு தான், நான் சினிமா
பார்ப்பதை அன்றோடு நிறுத்தி
விட்டேன்.
நான் இன்று வரை கடை
பிடிக்கும் சில நல்லொழுக்கங்களுக்கு
என் தந்தையே காரணம்
என்றால் அது மிகையல்ல.
Really a very honest
Gentleman
Dr.Vavar F Habibullah
No comments:
Post a Comment