Saif Saif
நபிகளின் மறைவுக்குப் பின் கலீஃபாக்கள் ஆட்சி நடைபெற்றதை அனைவரும் அறிவோம்..
இதில் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியை வரலாற்று ஆசிரியர்கள் மிகவும் சிறப்பாக குறிப்பிடுகிறார்கள்..
அதில் நிகழ்ந்த பல விஷயங்களை எழுத எனக்கு ஆசையுண்டு.. ஆனால் விரிவு கருதி சில விஷயங்களை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..
இவருடைய ஆட்சிக் காலத்தில் தான் ஆயிரக்கணக்கான பள்ளி வாசல்கள் எழுப்பப்பட்டது..
#கஃபத்துல்லாஹ் விரிவாக்கி கட்டப்பட்டது..
அதன் மீது திரையிடப்பட்டது..
#மஸ்ஜிதுந்_நபவி பள்ளிவாசலும் புதுப்பிக்கப்பட்டு விரிவாக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது..
மஸ்ஜித்துகளில் வெளிச்சத்திற்காக விளக்குகளை எரிப்பதற்கு ஏற்பாடு செய்து தமீம் தாரி என்பவர் அந்த பொறுப்பை ஏற்றார்.
#தரை_விரிப்பு பேரீச்சம் பழ ஓலைகளாலான பாய் முதன் முதலில் இவர் காலத்தில் தான் பள்ளிவாசலில் விரிக்கப்பட்டது..
போர்ச் செல்வங்களிலிருந்து கண்டெடுத்த சாம்பிராணி முஅத்தினிடம் ஒப்படைக்கப்பட்டு பள்ளி வாசல்களில் வெள்ளிக்கிழமை தோறும் நறுமணமூட்ட வழிச் செய்யப் பட்டது..
#சிறைச்சாலை கூட உமர் அவர்களின் கண்டு பிடிப்பு தான்..
ஸப்வான் இப்னு உமைய்யாவின் வீட்டை நான்காயிரம் திர்ஹம்களுக்கு விலைக்கு வாங்கி சிறைச்சாலையாக மாற்றப் பட்டது..
காவல் துறையை நிறுவியவரும்
இவர் தான்.
விருந்தினர் மாளிகைகள் அமைத்ததும் இவர் தான்..
முதன் முதலில் தலைநகர் மதீனாவில் #பைத்துல்மால்#பொது #நிதியகம் ஏற்படுத்தி எண்ணையும் எழுத்தையும் அறிந்த நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு அர்கம்(ரலி) அவர்களை நியமித்ததும் உமர் அவர்கள் தான்..
#பள்ளி_வாசல்களில் #உரைநிகழ்த்தும்_பழக்கம் இவர் காலத்தில் தான் நிகழ்ந்தது.. தமீம் தாரி தான் இஸ்லாமிய வரலாற்றில் முதன் முறையாக உரை நிகழ்த்தியவர்..
#இமாம்களுக்கும் #முஅத்தீன்களுக்கும் #ஊதியம் நிர்ணயித்ததும் உமர் தான்..
ஆதரவற்ற கிருஸ்தவர்கள் யூதர்களுக்கும் கூட உதவித்தொகை வழங்கியவர்..
அன்றே தாயால் கைவிடப்படுகின்ற (இப்போதைய தொட்டில் குழந்தை திட்டம்) குழந்தைகளை கண்டெடுத்து அதற்குரிய செலவுகளுக்கு பைத்துல்மால் பொறுப்பெடுத்து உதவித் தொகை பராமரிப்பு தொகையை வழங்கியது முதன் முதலில் இவர் காலத்தில் தான்.
இன்னும் மார்க்க விஷயங்களில் முக்கியமான மூன்று விஷயங்களில் எடுத்த முடிவு இன்று வரை நடைமுறையிலும் உள்ளது..
இன்ஷா அல்லாஹ் அதைப் பிரிதொரு பதிவில் எழுதலாம்..
Saif Saif
No comments:
Post a Comment