"இராவுத்தர்" பெயர் வர காரணம் என்ன? இந்த பதிவை படிப்பதால் அறிந்து கொள்ளலாம்.
இது கோவில் அல்ல, (இந்த படம்)
தமிழக முஸ்லீம்களால்
கட்டபட்ட பள்ளிவாசலாகும்,
பழங்கால தமிழர்களில் அடையாளமான கோவில் தோற்றத்தில் இருக்கும் இந்த கட்டிடம் என்னவென்று தெரிகிறதா.!?
தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு முன் கட்டபட்டு பிறகு கி.பி 1036 புனரமைப்பு செய்யபட்ட கட்டிடம்
அதாவது தஞ்சை கோவில் கட்டி முடித்து 30 ஆண்டுகளில்
1400 ஆண்டுக்கு முன் தமிழகம் மற்றும் கேரளத்தை தமிழ் மன்னர்களால் ஆண்ட காலம் கி.பி 628 முதல் 630 வரை இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கட்டபட்ட பள்ளிவாசலாகும்,
இது போன்று பழைமையான பள்ளிவாசல்கள் தமிழகம் மற்றும் கேரளத்தில் பல உண்டு
ஆனால் அதில் உருவ பொம்பை சிற்பம் தவிர்க்கபட்டு தமிழ் மற்றும் இஸ்லாமிய கலாச்சாரத்தோடு கட்டபட்டு இன்றும் இருக்கிறது.
எப்படி முகலாயர்கள் வருகைக்கு முன்பே தமிழகத்தில் பள்ளிவாசல் கட்டபட்டது.!?
அதுவும்1400 வருடம் முன் தமிழகத்தில் முஸ்லீம்கள் இருந்தார்களா.!?
ஆம் முகலாயர் வருகை என்பது கி.பி 1206 ஆம் ஆண்டு, அதுவும் முகலாயர்கள் தமிழகம் மற்றும் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளை ஆட்சி செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது.!!
பிறகு எப்படி தமிழகத்தில் முஸ்லீம்கள் வந்தார்கள்.!?
இஸ்லாம் அரேபியாவில் கி.பி 610 இறைதூதர் முஹம்மது நபி அவர்களால் அறிமுகமாகியது.
தமிழக முஸ்லீம்களின் துவக்கம் என்பது கி.பி 628 கேரளாவை ஆண்ட தமிழ் மன்னரான சேரமான் பெருமாள் இஸ்லாத்தை ஏற்றதால் தமிழர்கள் மத்தியில் இஸ்லாம் அறிமுகமானது,
அரேபிய வணிகர்களுடன் தமிழர்கள் அதிகம் தொடர்பில் இருந்ததால் அதன் வாயிலாகவும் இஸ்லாத்தை ஏற்றார்கள்
தமிழர்கள்.
அன்றில் இருந்து இன்று வரை தமிழக முஸ்லீம்களை இராவுத்தர் என்றும் மரைக்காயர் என்றும் தூய தமிழில் அழைப்பதுண்டு
அதற்கு காரணம் நாம் அறிந்ததுண்டா.!?
இஸ்லாத்தை ஏற்ற தமிழர்கள் அரேபியாவில் இருந்து குதிரைகளை இறக்குமதி செய்து மன்னர்களில் குதிரை படைக்கு பயிற்ச்சியாளர்களாக இருந்ததால் அன்று முஸ்லீம்களுக்கு இராவுத்தர் என்று பெயர் ஏற்பட்டது
தூய தமிழில் இராவுத்தன் என்றால் குதிரை படைக்கு பயிற்ச்சியாளன் என்று பொருள்
அதே போல் கடல் மார்க்கமாக வணிகம் செய்த தமிழர்கள் இங்கு கிடைக்கும் வாசனை பொருட்களை அரபு நாடுகளில் மரைகளத்தில் ஏற்றுமதி செய்து அதன் முலம் அவர்களுக்கு இஸ்லாம் அறிமுகமாகி இஸ்லாத்தை ஏற்றதால் தமிழக கடல் பகுதியில் வாழும் இஸ்லாமியர்களை மரைகாயர் என்று அழைப்பார்கள்,
மரைக்காயர் என்றால் தூய தமிழில் மரக்கல ராயர் மரக்கலம் கட்டி வணிகம் செய்பவர்கள் என்பதாகும்.!!
இது போல் சில பெயர்களை கொண்டவர்கள் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட பல சமூகத்தில் இருந்தும் மற்றும் பல சாதியில் இருந்தும் இஸ்லாத்தை ஏற்றவர்களே மற்றபடி ராவுத்தர், மரைக்காயர் என்பது சாதி பிரிவு அல்ல.!!
தொழிலை வைத்து சாதி மற்றும் சமூக பெயர் ஏற்பட்டதால் இராவுத்தர், மரைக்காயர் என்பதும் முஸ்லீம்களுக்கு அடையாளமாக்கபட்டது.
https://www.facebook.com/pallapattimakkal/
No comments:
Post a Comment