💞"முத்தே முத்தான மஹ்மூத் நபியே"
பாடல் வரிகள் : நூர் ஷஃபியா
காதிரியா
பாடியவர் : ஆஷிகே ரஃபீக்💞
➖🌹
முத்தே முத்தான மஹ்மூத் நபியே
மொத்தமாய் ரூஹ் குதுஸியின் உள்ளே
நூராய் வந்தீரே.....
நூரே
தவத்தினில் கண்டேனே......
தன்னிலை மறந்தேனே.......
தாஹா நபியே காதலில் மகிழ்ந்தேன் நேசராய் இருந்தீர்....
வாசலிலே வந்தே பார்த்தே அகமகிழ்ந்தேன்....
ஏக்கம்தீர ஏந்தலர் வந்தீர்
ஏங்கிய 'நூர் ஷஃபியா' என்னை பார்த்தீர்
போற்றி புகழ்ந்தேனே....
பூரிப்பில் திழைத்தேனே...
புண்ணியம் பெற்றேனே..
என்முகமதில் இருக்கும் முழுமதியே
சிரசில் இருக்கும் சிராஜொலியே
கண்ணில் இருக்கும்
கண்மணியே
கல்பினில் இருக்கும் காதலரே
எலும்பில் இருக்கும்
ஏந்தலரே என்றும்
பிரியம் வைத்தவள் நானன்றோ..(2)
(முத்தே......)
என்மனதில் இருக்கும் மாணிக்கமே
ரத்தத்தில் இருக்கும் இறை நேசமே
சுவாசத்தில் இருக்கும் சுந்தரரே
சதையில் இருக்கும் சற்குருவே
காருண்ய நபியின் *ஸலவாத்* *சலாம்* மினை
சாட்சியாய் வைத்தவள் நானன்றோ
(முத்தே...)
என்மூச்சில் இருக்கும் முச்சுடரே
பேச்சில் இருக்கும் பேரழகே
நரம்பில் இருக்கும் நறுமலரே
நாவில் இருக்கும் நற்குணமே
நூரே முஹம்மதியா நுபுவத் அனைத்தையுமே
நூரினில் நூராய் தந்தீர்களே
(முத்தே....)
என்சொல்லில் இருக்கும் செம்மலரே
செயலில் இருக்கும் செங்கதிரே
அகத்தில் இருக்கும் அற்புதமே
அனைத்துமாய் இருக்கும் அருமருந்தே
ஒர்மையாய் இருந்தேன்
உள்ளத்தில் உணர்ந்தேன்
வார்த்தையை கவியாய்
இசைத்தேனே..(2)
முத்தே முத்தானா மஹ்மூத் நபியே
ஏக்கத்தை தீர்த்திட்ட ஏந்தலர் நபியே
நிலவுக்கு சமமன்றோ...
ஒளியும் தருமன்றோ..
அதுவே நிலையன்றோ...
➖🌹
🖋நூர்ஷஃபியா காதிரியா
No comments:
Post a Comment