Monday, November 18, 2019

பிறந்த நாள்

Dr.Vavar F Habibullah
வாழ்க்கையோ..
அந்தி சாயும்
பொன் மாலைப் பொழுது!
(73-ல் காலடி தொடர்கிறது)
நேரமோ...
பனி பொழியும்
அதிகாலைப் பொழுது!
(இங்கு அமெரிக்காவில்)

அன்பர்கள்,உறவினர்கள்
உற்ற நண்பர்கள் அலைபேசியில்
தொலைபேசியில், சமூக வலை
தளங்களில் பிறந்த நாள்
வாழ்த்து தெரிவித்தமை
அவர்களின் பாசத்தை,
நேசத்தை,அன்பை உணர
வைக்கிறது,உள்ளம் பூரிக்கிறது.


சாதாரண வேளைகளில்....
எவருக்கும் நான் தேவை இல்லை.
குழந்தை மருத்துவர் என்பதால்
குழந்தைகள் உயிர் காக்கும்
மெடிக்கல் எமர்ஜன்சிகளில்
மட்டும், சில மணி நேரம் நான்
அதிகம் பயன் படுத்தப்படுகிறேன்.
பயன் தீர்ந்த பின்னர் தூக்கி
வீசப்படுகிறேன்.
(just use & throw தான்)
அந்த சில மணி நேரங்களில்
மட்டுமே, என்னால் வாழ்வின்
பலனை அதிகம் உணர
முடிகிறது வாழும் வரை
மருத்துவப் பணி தொடரும்.

மரண பயம் இல்லாத நான்
இப்போது இறைவனிடம்
துணிந்து கேட்பது ஒரு
கோரிக்கை மட்டுமே...

இறைவா!
வாழும் காலம் வரை
பயனுள்ள வாழ்க்கை
வாழ உதவி செய்!
இல்லையேல்.. விரைந்து
உன் பக்கம் அழைத்து
கொள்!!

No comments: