Dr .Vavar F Habibullah
சாதாரண நோய்களுக்கு
கூட திருவனந்தபுரம்
கிம்ஸ் மருத்துவமனை சென்று
சிகிச்சை பெறுவது என்பது
நாகர்கோவில் முஸ்லிம் மக்களிடம்
ஒரு பிரிஸ்டிஜ் இஸ்ஸூவாகவே
மாறி விட்டது.
ஒரு நோய் வாய்ப்பட்ட பெண்மணியை
சமீபத்தில்,கல்ஃபில் வசிக்கும் மகன்
செலவில்... கிம்ஸில், சூப்பர் விஐபி அறையை நாளொன்றுக்கு பதினைந்தாயிரம் செலவில் புக் செய்து பத்து நாட்கள் சிகிச்சை அளித்த கதையை அந்த பிரமுகர் விவரித்த விதம்......
நோய் சரியாகாவிட்டாலும் பல
லட்சம் செலவு செய்த பெருமிதம்
அவரது பேச்சில் வெளிப்பட்டதை
என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
உள்ளூர் மலையாளிகளை விட
நாகர்கோவில் முஸ்லிம் நோயாளிகளால்
அதிக சதவீதம் அறைகள் அங்கு நிரம்பி வழிவதாக மருத்துவமனை நிர்வாக அறிக்கை
தெளிவு படுத்துகிறது.
நாகர்கோவிலில் உள்ள தரமான மருத்துவமனைகளில் அல்லது மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதைக் கூட இவர்கள் இப்போது தவிர்த்து வருகிறார்கள்.
இவை எல்லாம் ஏழைகள் மருத்துவமனை என முத்திரை குத்தி விட்டார்கள். நாகர்கோவிலில் உள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ள முஸ்லிம் டாக்டர்களை இவர்கள் டாக்டர்கள் என்றே சொல்வதில்லை.ஏன் மதிப்பது
கூட இல்லை.முஸ்லிம் வழக்கறிஞர்
நிலை இதை விட மிகவும் கேவலமான
நிலையில் உள்ளது.
இப்போது, முஸ்லிம் இளம் மாணவர்களை
தேர்வு செய்து ஐஏஎஸ்,ஐபிஎஸ்,
நீட் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து அதிகாரிகளாக டாக்டர்களாக மாற்றுவோம்
என சில சமுதாய நிறுவனங்கள் சொல்வதை கேட்கும்போது....
கனிகளை ஒதுக்கி விட்டு
காய்களை கனிகளாக்கும்
முயற்சியாகவே படுகிறது.
அரவிந்தன் பிள்ளைகளும்,
சாய் உமாக்களும்,ராமன்களும்
கண்ணன்களும்,யபாஸ்களுமே
இன்றும் என்னை டாக்டராக மதித்து
சிகிச்சையை தொடர்வது நான் செய்த
பாக்கியம் என்றே சொல்ல வேண்டும்.
இப்போது எல்லாம் முஸ்லிம்
இறைச்சி கடைகளில் மட்டுமே
கூட்டம் களை கட்டுகிறது.
No comments:
Post a Comment