Saif Saif
Saif Saif
பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் அறிவிப்பால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சி...!!
மாலி நாட்டை சார்ந்தவன் முஹம்மது கசாமா (வயது 22).இவர் வேலை தேடி பிழைப்புக்காக பிரான்ஸ் நாட்டிற்கு வந்திருந்தார்.
இன்று காலை பிரான்ஸ் வடக்கு வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியின் பால்கனியின் வெளியே 4 வயது குழந்தை ஒன்று தொங்கிய நிலையில் அழுது கொண்டிருந்தது.
அதனை கீழே விழாமல் அண்டை வீட்டுக்காரர் பிடித்துக் கொண்டிருந்தார்.
இதனை கண்டு திடுக்கிட்ட முஹம்மது கசாமா வேடிக்கை பார்த்துக்கொண்டும்,
செல்பி எடுத்துக்கொண்டும் இருந்த மக்களை தள்ளிவிட்டு மாடியின் முன்சுவர் வழியே ஸ்பைடர் மேன் பாணியில் பயமின்றி ஏறினார்.
தனது உயிரை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் குழந்தையை காப்பாற்ற சிரமப்பட்டு சுவரில் ஏறி காப்பாற்றி பத்திரமாக வீட்டுக்குள்ளே தள்ளினார்.
இதனை படம் பிடித்த ஒருவர் சமூக வளைதலங்களில் போடவே அது முகநூலில் ட்ரெண்ட் ஆகி முஹம்மதுவிற்கு பிரான்ஸ் மக்களிடையே பாராட்டுகள் குவிந்தன.
இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் இன்றைய அறிவிப்பில்..
"குழந்தையை காப்பாற்றிய முஹம்மது எனும் இளைஞனுக்கு நம் நாட்டின் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும்!
அவருக்கு வீரதீர செயல் விருது வழங்கப்படும்!
மேலும்,தீயணைப்பு துறை பிரிவில் உயர் பதவியோடு கூடிய பணியில் அமர்த்தப்படுவார்" என கூறியுள்ளார்.
நாமும் பாராட்டுவோம்!
#The_Real_Hero
#Mohammed_Gasama
No comments:
Post a Comment