ஒவ்வொரு நாளும் கண்ணாடி முன் நின்று தலைமுடியை கவனமாக ஆராயும் அநேகரில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் தங்கள் தலைமுடியில் அக்கறை காட்டுகிறார்கள்; சில சமயங்களில் அதுவே கவலையாகவும் வேதனையாகவும் ஆகிவிடுகிறது. ஏனென்றால் சாதாரணமாக தினமும் 50 முதல் 100 முடிகள் உதிரும் இதில் சிலருக்கு கொத்து கொத்தாக முடி கொட்டுவது தான் பிரச்சினை. காரணம் என்னவென்று தெரியாமல் பல பல மருத்துவம், பலவிதமான எண்ணெய் களை தேய்ப்பது, விளம்பரத்தில் வரக்கூடிய ஷாம்பூ களை வாங்கி தலையில் தேய்த்து குளிப்பது....
முடிவு மேலும் அதிகமாக முடி கொட்டுவது தலை வழுக்கையாக ஆகுவதே மிச்சம்.
உங்கள் அழகிய தலை முடி உதிர்வதற்கு அல்லது தலை வழுக்கையாக ஆக்குவதற்கு பெரும்பாலும் பல காரணங்கள். ஒரு காரணம் தாய், தந்தை மரபு வழியிலும் முடி உதிர்தல் பிரச்னை தொடர்வது.
வயதாக வயதாக முடி உதிர்தல் என்பது தவிர்க்க இயலாத ஒன்று. முடி வலிமை இழப்பது இயல்பான ஒன்று. 30 வயதிற்கு மேல் முடி வளர்ச்சி குறையும் அது மட்டுமல்லாமல் முடியின் அடர்த்தியும் குறையத் தொடங்கும்.
உங்களுக்கு
அதிக அளவு மன அழுத்தம் வேலைப்பளு, மனம் அமைதியின்மை, எரிச்சலடையும் மனப்பான்மை போன்ற காரணங்களாலும் முடி உதிர்தல் ஏற்படும். வழுக்கையும் விழும்.
உங்கள் உடல் சத்து குறைவால் எடை குறைதல், இரும்பு சத்து குறைதல், இரவில் தூக்கம் இன்மை, சரியான முறையில் முடியை பராமரிக்காமல் இருப்பது. மொத்தத்தில் உடலில் இரும்பு சத்து குறையும், மன அழுத்தமே காரணம்.
உங்கள் உடல், மனம் பலம் பெற வேண்டுமென்றால் உங்கள் உடலுக்கு ஊட்டச்சத்து, மருந்து கொடுப்பதுடன் உங்கள் தலைமுடி நோய்யுற்று இருப்பதை சரி செய்துவிடமுடியாது இதற்கு வழி இறை திக்ரு தியானம் மூலம் இறை சக்திகளையும் பிரபஞ்ச சக்திகளையும் உங்களில் நிலைப்பெற செய்து சரி செய்யவேண்டும்.
هُوَ الْاَوَّلُ وَالْاٰخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
அவனே முதலானவன்; அவனே இறுதியானவன்; அவனே வெளிப்படையானவன்; அவனே மறைவானவன்; அவனே ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் : 57:3)
மேலே உள்ள இறை வசனத்தில் வரக்கூடிய நான்கு இஸ்மு அதாவது
""يا الاول، يا الآخر، يا ظاهر،ي باطن""
""யா அவ்வலு, யா ஆகிரு, யா ழாஹிரு, யா பாதினு""
என்று இஸ்மாக ஓதலாம் அல்லது முழு வசனத்தையும் ஓதலாம். ஓதி எண்ணெயில் ஊதி தலையில் தேய்த்து வாருங்கள். இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு முடி உதிர்தல் நின்றுவிடும்.
மௌலவி கலீfபா
அஹமது மீரான் சாஹிப்
உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
(தல்ஸமாத்)
மேலப்பாளையம்
திருநெல்வேலி
No comments:
Post a Comment