வேளச்சேரி 100 அடி ரோடு !
மரங்களே இல்லாத
கட்டிடங்கள் நிறைந்த, புழுதி படிந்த
கான்கிரீட் சாலை..!
அச்சூழலுக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாத,
நீல நிற உடலும் மரப்பட்டை நிற
தலையும் அலகும் கொண்ட
ஒரு பறவை..!
அங்கும், இங்கும் பறந்து
பேந்த, பேந்த விழித்துக்
கொண்டிருந்தது..!
அதற்கான மரம் இல்லாத இடத்தில்,
அதற்கென்ன வேலை..?
பாவம், தொலைந்து விட்டது போலும் ...
நம்மைப் போல் அதுவும்..!
அறிமுகம் இல்லாத இடத்தில்,
அறிமுகப்பட விரும்பாத இடத்தில்,
அறிமுகப் படுத்திக் கொள்ள இயலாத இடத்தில்,
நம்மைப் போல் அதுவும் தொலைந்து விட்டது..!
வாருங்கள் செல்வோம்..!
நமக்கான இடத்தை வேட்டையாட..!
அல்ல ! அல்ல !
நமக்கான இடத்தை கண்டடைய..!
நமது மரம் நமக்குக் கிடைக்கும் பொழுது,
அதனுடைய மரம்,
அதற்கும் கிடைத்துவிடும்..!
அதுவரை,
சுற்றி அலைவதையும்,
பேந்தப் பேந்த விழிப்பதையும்,
தவிர்க்க இயலாது..!
அந்தப் பறவையைப் போல்...!(என் இளைய மகள் மரியம் சித்திகா எழுதுகோலை இளைய வயதிலேயே கைகளில் எடுத்துக் கொண்டாள் . அந்த எழுதுகோல்களில் இருந்து துள்ளித் தெளித்தவைகளை நான் பதிவிடுகிறேன் )
Hilal Musthafa
இறைவன் நாடினால் தொடரும்
No comments:
Post a Comment