#உங்களைத் தலைமை தாங்க அவர்கள்
தகுதியானவர்கள் இல்லை# ..!
++++++++++++×××××××××××
தவ்ஹீத் ஜமாத்தில் இருக்கும் (எனக்கு தெரிந்த)
நண்பர்கள் பலர்..
தொழுகையை விட மாட்டார்கள்,
நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள்,
பொய் சொல்ல மாட்டார்கள்,
பணமோசடி செய்ய மாட்டார்கள்,
நோன்பை விட மாட்டார்கள்..
ஹராமான காரியத்தை செய்ய
அல்லாஹ் வை அஞ்சுவார்கள்..!
அதன் தலைமை பொறுப்பில்
இருப்பவர்களைப் பற்றி எனக்கு தெரியாது.
காரணம் நான் அதன் உறுப்பினராக
இருந்தது இல்லை.!
நம் இளைஞர்களை நினைத்து
நாம் இன்று என்ன கவலை படுகிறோமோ..
அந்த கவலை அவர்கள் மீது எனக்கு இல்லை.
அல் ஹம்து லில்லாஹ்.. அவர்கள்
இஸ்லாத்தில் மிக தீவிரமாகவே இருக்கிறார்கள். !
நான் அவர்களுக்கு கூறும் ஒரே வேண்டுகோள்....
நீங்கள் அறிந்த மொழிகளில், வசிக்கும் நாடுகளில்,
இன்னும் பிற ஆலிம்கள், மார்க்க அறிஞர்களின்
பயான் களை எல்லாம் மனம் திறந்து கேளுங்கள்.!
வல்ல ரஹ்மான் இன்னும் உங்கள் கல்புகளை
விசாலமாக்குவான் , எல்லாம் எங்களுக்கு தெரியும் என்று ஒரே கொள்கை வட்டத்தில் முடங்கி விடாதீர்கள்.
ஆன்மீகம் என்பது பெரும் கடல்..
அதில் கொஞ்சம் நனைந்து விட்டு
எல்லாம் இவ்வளவு தான் என்றும்,
எங்களுக்கு எல்லாம் தெரியும் என்றும்
இருந்து விடாதீர்கள்.!
உங்கள் உள்ளத்தில் சந்தேகம்
வரும் விஷயங்களை விட்டு விட்டு
அனைவரிடமும் சேர்ந்து இருங்கள்..!
உங்களுக்கு இறைவன் தான்
இந்த நேர்வழியில் வாழ உங்கள்
இதயங்களை மாற்றினான்,
பி ஜெ அல்ல..
அல்தாஃபி அல்ல..
தவ்ஹீத் ஜமாஅத்தும் அல்ல..
நீங்கள் விரும்பும் இந்த பரிசுத்த
இஸ்லாமிய கொள்கை உலகம்முழுவதும்
வஹாபி என்ற வசைப் பெயரை வாங்கி கொண்டு
வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.!
வீணான மன உளைச்சலுக்கு ஆகாமல்
இயகத்தை விட்டு வெளியேறி விடுங்கள்.
உங்களை தலைமை தாங்க அவர்கள்
தகுதியானவர்கள் அல்ல..!
அனைவரிடமும் ஒற்றுமையுடன்
இயங்குவோம்.
அல்லாஹ்வும் அதையே விரும்புவான்.
வெறுப்பை...... வெறுப்பால் விரட்ட முடியாது
அன்பால் தான் முடியும்..!
அல்லாஹ் போது மானவன்.!
by Haja Maideen
No comments:
Post a Comment