Wednesday, May 9, 2018

வாழ்வியல் தத்துவங்கள் ....! ( பாகம் 5 )


*
சிந்தனை சிறப்புகள் சேர்க்கும்
செயல்கள் செம்மை கொணரும்
நிபந்தனை நிர்பந்தம் நிர்வகிக்கும்
நிந்தனை நிர்மூலம் ஆக்கும்
*
பசியை ஆற்று
பாவத்தை நீக்கு !
பண்பை பற்று
புண்ணியம் ஆகும் !!
*

சிந்தையில் செதுக்கு
செயலில் வடி
சீர்தூக்கி பார்
செம்மைகள் வந்துசேரும்
*
மண்ணில் வீழும்
மழையும் எழும்
விண்ணைத் தொடும்
எண்ணித் துணிந்தால் - நீயும்
சிகரம் தொடலாம்
எழுந்து வாராய்
*
உடலுழைப்பால் உண்ணு
உயர்செய்கையால் மின்னு
இலக்கிலிருக்கட்டும் கண்ணு
வெற்றிக்கனிகளை அள்ளு
*
கற்று அறி
பட்டுப் படி
பாடுபட்டு சேர்
பண்பாட்டு வாழு
*
அன்பை கொடு
ஆனந்தம் கிட்டும்
தானம் கொடு
ஈருலகும் கிட்டும்
*
தவறுகள் நேரலாம்
தயக்கம் கொள்ளாதே
திருத்திக் கொள்ளவும்
திறமை வந்துசேரும்

*
Abdul Kader Sangam

No comments: