Friday, June 1, 2018

கோடிகளில் புரளும் அலிபனாவின் வாழ்வை புரட்டிபோட்ட சம்பவம்.

கோடிகளில் புரளும் அலிபனாவின் வாழ்வை புரட்டிபோட்ட சம்பவம்.
/////// "ஆபிரிக்காவில் வாழும் சிறுவனுக்கு தேவையான ஒரு சோடி செருப்புக்கே எனது செல்வம் பெறுமதியானது."///////
(படிப்பினை தரும் இந்த சம்பவத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்).........................................
================================================
அவுஸ்திரேலியா, சிட்னியை பிறப்பிடமாககொண்ட அரபு வம்சாவளியை சேர்ந்த 27 வயது நிரம்பிய செல்வந்தர் அலிபனா......
முதலில் இவருடைய செல்வ செழிப்பை விளக்குவதற்கு இங்கு ஒரு சில துளிகள்..........
அலிபனாவின் கரங்களில் அணிந்திருக்கும் பிளாட்டினத்தினாலான பிரேஸ்லட் ஒன்று மட்டும் 60 ஆயிரம் டாலர்(42 இலட்சம் இந்திய ரூபாய்கள் )
இவர் உபயோகிக்கும் Ferrari கார் 6 இலட்சம் டாலர்..(4 கோடி 20 இலட்சம் இந்திய ரூபாய்கள்)........
இவ்வாறாக மிகச்சிறிய வயதிலேயே அல்லாஹ்வின் அருட் கொடைகள் அனைத்தும் கிடைக்கப்பெற்ற நிலையில், மிகவும் வெற்றிகரமான செல்வச் செழிப்பான வாழ்கையின் நடுவே அலிபனாவை பேரிடியாக தாக்கியது உயிர்கொல்லி நோயான புற்றுநோய்.
இதுவே இவரது வாழ்க்கை முறையை மாற்றுவதற்கு காரணியாகவும் அமைந்தது.


நான்கு மாதங்களுக்கு முன்னர் புற்றுநோயின் நான்காம்கட்ட நிலையில், இன்னும் ஏழு மாதங்களே உயிர்வாழ முடியும் என்று அறிவிக்கப்பட்டபொழுது, ..........
இந்த செய்தி கிடைத்தவுடன், மிக வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த வியாபாரத்தையும், ஆடம்பரமான பொருள்களையும் விற்று அதன்மூலம் ஆபிரிக்காவில் தொண்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கி வறிய மக்களுக்கு உதவ தொடங்கினார்.... (கார், கடிகாரம், தங்க ஆபரணங்கள் எல்லாம் உட்பட....)
இவரது தொண்டு நிறுவனத்தின் பெயர் Muslim Around The World Project என்பதாகும்.
அதிகமான பள்ளிவாசல்களையும், பாடசாலைகளையும்
கட்டியுள்ளார்.

யார்யாரெல்லாம் உதவி தேவையான நிலையில் வசதியற்றவர்களாக இருக்கின்றார்களோ, அவர்களுக்கு உதவிசெய்யும் பாக்கியம் தனக்கு
கிடைக்கப்பெற்றதாக கூறுகிறார்.

"மக்கள் மௌத்தை மறந்து உலகாயுத பொருட்களின் பின்னால் அலைவது தூரதிஷ்டவசமானது ........ சிறிது காலமே
உயிரோடிருப்போம் என்று அறியும்பொழுது அனைத்துமே செல்லாக்காசாகி விடுகிறது" இவ்வாறு கூறும் இவர், தொடர்ந்து இப்படி தெரிவிக்கிறார்.........
"ஆபிரிக்காவில் வாழும் சிறுவனுக்கு தேவையான ஒரு சோடி செருப்புக்கே எனது செல்வம் பெறுமதியானது.

அவனது சிரிப்புக்கு எனது காரின் பெறுமதி ஈடாகாது."
அலிபனாவின் முன்னைய வாழ்க்கையில் இவரது நிலை வேறாகும்.
இப்பொழுது இவருக்கு இறைவன் அளித்த ஒவ்வோர் விடயமும்
அருட்கொடையாக தோன்றுகிறது.

மரணித்த பின்னர் தானும் இவ்வாறுதான் அடக்கப்படுவோம் என்பதை நினைவுகூரும் முகமாக, அடிக்கடி மையவாடிகளை தரிசித்துவரும் இவர், உலகை பிரிந்து செல்லும்பொழுது நல்லமல்களைதவிர எதுவுமேகூடவராது என்ற உண்மையை உணர்ந்தவராக, இவ்வுலகை நீங்கிசெல்லும்பொழுது அல்லாஹ்வுக்கு உகந்த மனிதனாக செல்ல வேண்டுமென்பதை தனது துவாவாகவும் கொண்டுள்ளார்.

இந்த நோயின் காரணமாக ஏற்படும் வலியை குறைப்பதற்காக கொடுக்கப்படும் மருந்துகள் மிகவும் வீரியமுடையதாக இருப்பதனால், சில நேரங்களில் "யாஅல்லாஹ் என்னை அழைத்துவிடு" என்று பிரார்த்தித்ததாக கூறுகிறார்.

யாஅல்லாஹ் இவருக்கு இந்நோயிலிந்து பூரண சுகமளித்து, இவருடைய பாங்களை மன்னித்து, ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சுவனத்தை வழங்குவாயாக.....ஆமீன் ....
https://video.genfk.com/1833761040205078

No comments: