பாத்ரூமில் இருந்து ‘என்னங்க’ என்று மனைவி அழைத்தால், “பல்லி அடிக்க கூப்புடுறா”னு அர்த்தம்.
வீட்டு வாசலில் நின்று நண்பனுடம் பேசிக் கொண்டிருக்கும் போது ‘என்னங்க’ என்று அழைப்பு வந்தால் “மரியாதையா உள்ள வாறியா இல்ல கதவ சாத்தட்டா”னு அர்த்தம்.
கல்யாண வீட்டில் ‘என்னங்க’ என்று சத்தம் கேட்டால் “என் சொந்தக்காரங்க வந்திருக்காங்க, சீக்கிரம் வாங்க”னு அர்த்தம்.
ஹோட்டலில் சாப்பிட்டு முடித்தபின் ‘என்னங்க’ என்று அழைப்பு வந்தால் “சீக்கிரம் பில்ல கட்டீட்டு வா”னு அர்த்தம்.
மனைவியுடன் பைக்கில் போகும்போது ‘என்னங்க’ என்று அழைப்பு வந்தால் “பூக்கடை வருது, வண்டிய நிப்பாட்டு”னு அர்த்தம்.
ஜவுளி கடையில் நின்று ‘என்னங்க’ என்று அழைப்பு கேட்டால் “நான் தேடிட்டு இருந்த புடவை கிடச்சிடுச்சு. பில் போடணும் சீக்கிரம் வாங்க”னு அர்த்தம்.
வீட்டில் பீரோ முன்னாடி நின்றுகொண்டு ‘என்னங்க’ என்று மனைவி ஆசையோடு அழைத்தால் “மவனே இன்னக்கி உன் பர்ஸ்ஸ காலி பன்றேன்டா”னு அர்த்தம்.
தட்டுல சோறு போட்டுட்டு ‘என்னங்க’ என்று அழைப்பு வந்தால் “சோறு போட்டாச்சு. வந்து வயிர் நிறைய கொட்டிக்கோ”னு அர்த்தம்.
பக்கத்து வீட்டு சண்டையில் நாம தலையிடும் போது ‘என்னங்க’ என்று மனைவியின் சப்தம் வேகமாக கேட்டால் “உன் வேலைய பாத்துக்கு போ. தேவையில்லாத பிரச்சனைல நீ மூக்க நுழைக்காதே”னு அர்த்தம்.
நைட்டு தூங்குவதற்கு முன் ‘என்னங்க’ என்று அழைப்பு வந்தால் “மொபைல்ல நோன்டியது போதும். மரியாதையா போனை வச்சுட்டு தூங்கு”னு அர்த்தம்.
இப்படி பல அர்தங்களை உள்ளடக்கி கொண்டது தான் “என்னங்க”.
“என்னங்க” என்பது வார்த்தையல்ல,
அது ஆண்களின் “வாழ்க்கை”.!
நன்றி :தமிழ்நெஞ்சம்
No comments:
Post a Comment