Tuesday, May 8, 2018
கல்வியா செல்வமா வீரமா!! / KNOWLEDGE SKILL AND TALENT - dr.habibullah
கிரேக்கத்தின் சாக்ரடீஸ்
பிளாட்டோ,அரிஸ்டாடில்
தொட்டு தமிழ்நாட்டின்
அண்ணா வரை
கல்வியே
தங்கள் வெற்றி என்றனர்.
அமெரிக்காவின்
ரோத்சைல்ட்,ராக்பெல்லர்
பில்கேட்ஸ் தொட்டு நமதூர்
அம்பானி,அதானி வரை
செல்வமே
தங்கள் வெற்றி என்றனர்.
அலெக்சாண்டர்,சீசர்
நெப்போலியன் தொட்டு
நமதூர்
சேர,சோழ,பாண்டியன் வரை
வீரமே
தங்கள் வெற்றி என்றனர்.
இன்று புகழ் என்பது
ஆட்டக்காரர்களை
பாட்டுக்காரர்களை
கூத்தாடிகளை மக்கள்
முன் அறிமுகம் செய்து
பணம் பண்ணும்
ஐபிஎல்சினிமா,மீடியா
நிறுவனங்களின்
கட்டுப்பாட்டில் உள்ளது.
புகழை உற்பத்தி செய்வதும்
விலை நிர்ணயம் செய்வதும்
இவை தான்.
அறிவு,ஆற்றல்,திறன்,
திறமை என்பதெல்லாம்
நீட்,ஜீ தேர்வாகி...
மனித மூளையின் அறிவை
எடை போடும் உயர் தொழில்
நுட்ப, மனிதஉபகரணத்தை
உற்பத்தி செய்யும், மனித ஆற்றல்
மேம்பாடு வியாபார
நிறுவனங்களின்(human resource)
கட்டுப்பாட்டில் வந்து
வெகு நாட்களாகி விட்டன.
எதிர்கால மனித வெற்றி
தோல்விகளை இனிமேல்
இந்த நிறுவனங்களே முடிவு
செய்யும்.இவை அரசியலையும்
வியாபாரமாக்க துணிந்துள்ளன.
வாட்சன் ஒரு முறை சொன்னார்
“உங்கள் குழந்தைகளை
என்னிடம் பயிற்சிக்கு
அனுப்புங்கள். யாராக, எதுவாக
ஆக வேண்டும் என்று மட்டும்
சொல்லுங்கள். நிச்சயம்
ஆக்கி காட்டுகிறேன்....
இளவரசனாக! சர்வாதிகாரியாக!
ஏன் கொள்ளைக்காரணாக...!!”
கல்வியால்,அறிவால் பெரிய
வெற்றிகளை பெற முடியும்
என்று தோன்றவில்லை.
கல்வித்தகுதி இல்லாதவர்களே
நமதூரில் கல்வி அமைச்சர்களாக
இருக்கிறார்கள்.
பணம்,பதவி,புகழ் இவற்றைப்
பெற கல்வி அவசியம் இல்லை.
துபையில் தொழில் வல்லுநர்கள்
மத்தியில் ‘அறிவு ஆற்றல் திறமை’
பற்றி நான் நிகழ்த்திய
கருத்தரங்கின்
ஒரு சிறிய அறிமுக உரை.
Vavar F Habibullah
KNOWLEDGE SKILL AND TALENT - dr.habibullah
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment