.
குறள் - 01:02 :
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
.
விளக்கம் :
நூல்களை கற்றவர்க்கு அக்கல்வி அறிவின் பயன் யாது? மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்?
.
குர்ஆன் : 30:56-57.
எனினும், கல்வியறிவும் நம்பிக்கையும் கொடுக்கப் பட்டவர்கள் (அதனை மறுத்து) "அல்லாஹ் எழுதியவாறு நீங்கள் உயிர் பெற்றெழும் இந்நாள் வரையில் (பூமியில்) இருந்தீர்கள். இது (மரணித்தவர்கள்) உயிர் பெற்றெழும் நாள். நிச்சயமாக நீங்கள் இதனை உறுதி கொள்ளாதவர்களாகவே இருந்தீர்கள்" என்றும், "ஆனால், அந்நாளில் (இறைவனை தொழாது) அநியாயம் செய்தவர்கள் கூறும் சாக்குப்போக்கு அவர்களுக்குப் பலனளிக்காது. அன்றி, அவர்கள் இறைவனைத் திருப்தி செய்து வைக்கவும் வழியிராது"
.
விளக்கம் :
கல்வியறிவு பெற்றவர்கள் தூய இறைவனை தொழாது இருந்ததனால் மறுமையில் தீர்ப்பளிக்கப்படுவர்
.
Reference :
1) http://www.thirukkural.com/
2) http://www.tamililquran.com/
#3 திருக்குறளும் திருக்குர்ஆனும்
.
குறள் - 01:03 :
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
.
விளக்கம் :
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்த நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
.
குர்ஆன் : 2:207 & 3:136.
- அல்லாஹ்வின் (திருப்) பொருத்தத்தைப் பெறுவதற்காகத் தன்னுடைய உயிரையே தியாகம் செய்யக்கூடியவர்களும் மனிதர்களில் உண்டு. அல்லாஹ் (இத்தகைய) அடியார்கள்மீது மிகவும் கருணையுடையவன்.
- இத்தகையவர்களுக்குப் பிரதிபலன், அவர்கள் இறைவனுடைய மன்னிப்பும், நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளும் ஆகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கிவிடுவார்கள். நன்மை செய்தவர்களின் கூலியும் நன்றே!
.
விளக்கம் :
இறைவனின் பொருத்தத்தை நாடி உயிரைக்கூட விட துணிந்தவர், இறைவனின் கருணையால் சுவர்கத்தில் நிலைத்து வாழ்வார்.
Reference :
1) http://www.thirukkural.com/
2) http://www.tamililquran.com/
3) http://www.tamililquran.com/
#4 திருக்குறளும் திருக்குர்ஆனும்
.
குறள் - 01:04 :
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
.
விளக்கம் :
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
.
குர்ஆன் : 27:40.
எவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கின்றானோ (அதனால் என் இறைவனுக்கு யாதொரு நஷ்டமுமில்லை.) நிச்சயமாக என் இறைவன் (எவருடைய) தேவையற்றவனும், மிக்க கண்ணியமானவனாகவும் இருக்கிறான்" என்று கூறுவீராக.
.
விளக்கம் :
எந்த தேவைகளுமற்ற இறைவனை பொருந்த எண்ணி நன்றி செலுத்துபவர் அவருக்கு அவரே நன்மை செய்துக்கொள்கிறார் எனவே அவருக்கு எப்பொழுதும் எங்கும் அவருக்கு துன்பம் இல்லை.
.
Reference :
1) http://www.tamililquran.com/
2) http://www.thirukkural.com/
3) http://
4) http://
5) http://
#5 திருக்குறளும் திருக்குர்ஆனும்
.
குறள் - 01:05.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
.
விளக்கம் :
இறைவனுடைய கீர்த்தியை விரும்பி அருஞ்செயல் புரிந்தவருக்கு, துனபம் சேர்க்ககூடிய இருவினைகளும் சேராது.
.
குர்ஆன் : 30:38 & 2:262.
"... எவர்கள் அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை விரும்புகின்றார்களோ அவர்களுக்கு இதுவே (அறஞ்செயல்களே) மிக்க நன்றாகும். இத்தகையவர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்".
- "...அவர்களின் இறைவனிடம் அவர்களுக்குண்டு. மேலும் அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்".
.
விளக்கம் :
எவர்கள் அல்லாஹ்வுடைய கீர்த்தியை விரும்புகின்றார்களோ அவர்கள் புரிவதற்கு அறஞ்செயல்கள் மிக்க நன்றாகும். இத்தகையவர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள், அவர்களை துன்பம் தீண்டாது.
.
Reference :
1) http://www.thirukkural.com/
2) http://
3) http://
4) http://
5) https://www.facebook.com/
6) http://
7) http://www.tamililquran.com/
8) http://www.tamililquran.com/
No comments:
Post a Comment