Showing posts with label திருக்குறள். Show all posts
Showing posts with label திருக்குறள். Show all posts

Sunday, July 27, 2014

.#10 திருக்குறளும் திருக்குர்ஆனும்

குறள் - 01:10.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
.
விளக்கம் :
பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேருவார்; நீந்தாததவர் இறைவனடியை சேரமாட்டார்.
.
குர்ஆன் - 13:24.
(இவர்களை நோக்கி) "நீங்கள் (உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களைப்) பொறுமையுடன் சகித்துக் கொண்டதன் காரணமாக உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! (இறைவனிடமுள்ள) இறுதி வீடு மிக்க நல்லதாயிற்று" (என்று கூறுவார்கள்.)..
.
விளக்கம் :
இப்பிறவியில் நேர்ந்த கஷ்டங்களையெல்லாம் பொறுமையுடன் இறைவனுக்காக பொறுத்துக்கொண்டு கடந்து சென்றவர் ஈடேற்றம் அதாவது இறைவனிடம் உள்ள அழகிய தங்குமிடம் செல்கிறார். மற்றவர் சேர்வதில்லை.
..

#9 திருக்குறளும் திருக்குர்ஆனும்

குறள் - 01:09.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
.
விளக்கம் :
குறையுள்ள உறுப்புகளில் அதன் குணம் இருப்பதில்லை அதுபோலத்தான் எண்குணத்தை உடைய இறைவனை வணங்காத தலையும்.
.
குர்ஆன் - 2:171 & 22:77.
- (அறியாமையில் தங்களுடைய மூதாதைகளைப் பின்பற்றும்) அந்தக் இறை மறுப்பாளர்களின் உதாரணம். (அர்த்தத்தை உணராது) கூச்சலையும் ஓசையையும் மட்டும் கேட்கக் கூடியதின் (அதாவது கால்நடைகளின்) உதாரணத்தை ஒத்திருக்கின்றது. (மேலும், அவர்கள் புலன்கள் இருந்தும்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர். ஆதலால், அவர்கள் (எதனையும்) அறிந்து கொள்ளவே மாட்டார்கள்.
- நம்பிக்கையாளர்களே! நீங்கள் குனிந்து சிரம் பணிந்து உங்கள் இறைவனை வணங்குங்கள்.
.
விளக்கம் :
இறைவனை வணங்காது இருப்பவர்கள் உறுப்புகள் இருந்தும் அதன் குணம் அற்றவர்கள்போல், இறைவனை சிரம் தாழ்த்தி வணங்குபவர்கள் நம்பிக்கையாளர்கள் மேலும் வெற்றியாளர்கள்.
..

#8 திருக்குறளும் திருக்குர்ஆனும்

குறள் - 01:08.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
.
விளக்கம் :
அறமாகிய கடலையுடைய அந்தணனது (இறைவனுக்கு அடிபணிந்தவனது) இடம் சேர்ந்தவனல்லாது, மற்றவர்க்கு பிறவி கடலை நீந்துவது கடினமாகும்.

குறிப்பு :
அந்தணன் என்பது சாதி அல்ல, பண்புப்பெயர் ஆகும், மேலும் குறள் 30 இவ்வாறு விளக்குகிறது "எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்". மற்றும் இக்குறள் அந்தணணோடு சேர்ந்து இருப்பதை மட்டும் பொருளாக எடுத்து கொள்ளமுடியாது, மேலும் அவனது குணங்களை தன்னுள்ளே எடுத்து கொள்ளுவதையும் குறிக்கும் எனவே அந்தணணுடன் சேர்ந்து அந்தணனாக மாறுவதே முதல் பத்தியின் பொருள்.
.
குர்ஆன் : 4:139., 3:102. & 3:185.
- "இவர்கள் நம்பிக்கையாளர்களை (முஸ்லிம்களை) விடுத்து நிராகரிப்பவர்களையே நண்பர்களாகவும் எடுத்துக் கொண்டார்கள். இவர்கள் அவர்களிடத்தில் கண்ணியத்தை விரும்புகின்றார்களா? .."
-"நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்பட வேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் இறந்துவிட வேண்டாம்."
- "... இவ்வுலக வாழ்க்கை மயக்கக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை."
.

#7 திருக்குறளும் திருக்குர்ஆனும்

குறள் - 01:07.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
.
விளக்கம் :
தனக்கு ஒப்புமை இல்லாத இறைவனுடய திருவடிகளை அன்றி மற்றவைகளை பொருந்த நினைக்கின்றவர், மனக்கவலையை மாற்ற முடியாது.
.
குர்ஆன் : 10:25 & 26
. (மனிதர்களே!) ஈடேற்றம் அளிக்கக்கூடிய வீட்டிற்கே இணையற்ற இறைவனான அல்லாஹ் அழைக்கிறான். (அவனுக்கு வழிப்பட்டு நடக்கும்) அவன் விரும்புகின்றவர்களை அதற்குரிய நேரான வழியிலும் செலுத்துகிறான்.. நன்மை செய்தவர்களுக்கு நன்மைதான். அதிகமாகவும் கிடைக்கும். அவர்கள் முகங்களை கவலையோ அல்லது இழிவோ சூழ்ந்துகொள்ளாது. நிச்சயமாக அவர்கள் சுவனவாசிகளே. அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்..

விளக்கம் :
இணையற்ற இறைவனான அல்லாஹ்வை வழிபடுபவர்களை கலவை சூழ்ந்துகொள்ளாது.
.

#6 திருக்குறளும் திருக்குர்ஆனும்

#6 திருக்குறளும் திருக்குர்ஆனும்
குறள் - 01:06.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
.
விளக்கம் :
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார் எக்காலத்தும் வாழ்வார்
.
குர்ஆன் : 91:7-10 :
உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக! அதன் நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான். அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார்.
.
விளக்கம் :
நன்மை தீமை பிரித்து அறிவிக்க பட்ட உள்ளதை நன்மை மட்டுமே செய்து தூய்மை படுத்துகிறவர் வெற்றிபெற்றவர் முடிவில்லா சுவர்க வாழ்க்கை வாழ்வார்.

Friday, July 25, 2014

#1 திருக்குறளும் திருக்குர்ஆனும்

#1 திருக்குறளும் திருக்குர்ஆனும்
குறள் - 01:01 :
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

விளக்கம் :
அகரம் எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

தமிழ் : அ, (அ - அகரம் )
ஆங்கிலம் : A, (அ - அகரம்)
ஹிந்தி : अ, (அ - அகரம் )
தெலுகு : అ, (அ - அகரம்)
அரபிக் : ا, (அலீஃப் - அகரம்)
சீனமொழி : 诶, (அ - அகரம்)
எபிரேயமொழி : א, (அலீஃப் - அகரம்)
சம்ஸ்கிருதம் : अ, (அ - அகரம்)
கிரேக்கம் : α (ஆல்ஃபா - அகரம்)

- மேலும் எத்தனை மொழிகளை ஆராய்ந்தாலும் அதன் முதல் எழுத்து அகரமாகவே இருக்கிறது. எனவே அடுத்த வரியும் நிதர்சனமான உண்மையாகத்தான் இருக்க முடியும்,எனவே முழு உலகமும் ஒரே இறைவனிடம் இருந்து தோன்றியதே.

Wednesday, July 23, 2014

திருக்குறளும் திருக்குர்ஆனும்

#2 திருக்குறளும் திருக்குர்ஆனும்
.

குறள் - 01:02 :
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
.
விளக்கம் :
நூல்களை கற்றவர்க்கு அக்கல்வி அறிவின் பயன் யாது? மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்?
.
குர்ஆன் : 30:56-57.
எனினும், கல்வியறிவும் நம்பிக்கையும் கொடுக்கப் பட்டவர்கள் (அதனை மறுத்து) "அல்லாஹ் எழுதியவாறு நீங்கள் உயிர் பெற்றெழும் இந்நாள் வரையில் (பூமியில்) இருந்தீர்கள். இது (மரணித்தவர்கள்) உயிர் பெற்றெழும் நாள். நிச்சயமாக நீங்கள் இதனை உறுதி கொள்ளாதவர்களாகவே இருந்தீர்கள்" என்றும், "ஆனால், அந்நாளில் (இறைவனை தொழாது) அநியாயம் செய்தவர்கள் கூறும் சாக்குப்போக்கு அவர்களுக்குப் பலனளிக்காது. அன்றி, அவர்கள் இறைவனைத் திருப்தி செய்து வைக்கவும் வழியிராது"
.
விளக்கம் :
கல்வியறிவு பெற்றவர்கள் தூய இறைவனை தொழாது இருந்ததனால் மறுமையில் தீர்ப்பளிக்கப்படுவர்
.
Reference :
1) http://www.thirukkural.com/2009/01/1.html#2
2) http://www.tamililquran.com/qurandisp.php?q=கல்வி&start=30#30:56


Friday, November 9, 2012

நாகூர் பாஷையில் திருக்குறள்

நாகூர்வாசிகளின் நகைச்சுவையைத் தூண்டுவதற்கு  “நாகூர் பாஷையில் திருக்குறள்”

“உடுக்கை இழந்தவன் கைபோல” என்று தொடங்கும் ஒரு திருக்குறளை எனது வலைப்பதிவில் எழுதப்போய் நம்ம ஊர்க்காரர் ஒருவர் இதுக்கு என்ன அர்த்தம்னு விளக்கம் கேட்டார். அவருக்கு நாகூர் பாஷையிலேயே விளக்கினேன். அவருக்கு உடனே புரிந்துப் போய் விட்டது.

இதேபோன்று குறள்களுக்கு நாகூர் பாஷையிலேயே பதவுரை எழுதினால் என்ன என்ற ஒரு விபரீத ஆசை எனக்கு தோன்றியிருக்கக் கூடாதுதான். என்ன செய்வது? திருவள்ளுவர் என்னை மாப்பு செய்வாராக.

    (பிகு. பரிமேலழகர், மு.வ., சாலமன் பாப்பையா, மு.க. இவர்கள்தான் விளக்கவுரை எழுத வேண்டுமா? நாம எழுதக்கூடாதா? நாகூர் ரூமியிடம் கேட்டுப் பாருங்கள். யாராவது பதிப்பாளர்கள் ரெடியாக இருக்கிறார்களா என்று. “நாகூர் பாஷையில் திருக்குறளுக்கு பதவுரை” என்று ஒரு புத்தகம் போட்டு விடலாம்.)

    ***

Monday, September 12, 2011

திருக்குறள் இசைத்தமிழ் - இசைக் குறுவட்டுகள்- இலவமாகப் பதிவிறக்கம்

இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்களைப் பயன்படுத்தி இசைக் கோப்புக்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 திருக்குறள் இசைத்தமிழ்க் குறுவட்டினை இலவமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த இணைப்பினைச் சொடுக்கவும்.

குறுவட்டு - 1

1. அகரம் முதல எழுத்தெல்லாம்
Source : http://ta.cict.in/thirukkural330-tamil-maiyam

Friday, June 24, 2011

திருக்குறள் இசைத்தட்டு (இலவச பதிறக்கம்)


திருக்குறள் இசைத்தட்டு (இலவச பதிறக்கம்)

திருக்குறள் இசைத்தமிழ்க் குறுவட்டினை இலவமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த இணைப்பினைச் சொடுக்கவும்.
முனைவர்.இரா.குணசீலன்
தமிழ் விரிவுரையாளர்
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்ககோடு
நாமக்கல் மாவட்டம்
தமிழ்நாடு
இந்தியா.
"

Saturday, August 28, 2010

திருக்குறள் பற்றிய அழகிய ஃப்ளாஷ் பிரசண்டேசன்

திருக்குறள் பற்றிய அழகிய ஃப்ளாஷ் பிரசண்டேசனைக் காண கீழ் உள்ள சுட்டியை க்ளிக் செய்யவும்.

உண்மை – Truth

அறிவு – Wisdom

சுயக்கட்டுப்பாடு – Self Control

இறை வணக்கம் – In Praise Of God

நாவடக்கம் – Restrain The Tongue

நற்சொல் கேட்டல் – Listening To The Wise
Rose Flower

அக்னி சிறகுகள் – Wings of Fire

வாழ்த்துக்கள் – Greetings

sathakkathullaah
Source: http://www.sadaqathullah.com/tamil3.html

=================================================================

திருக்குறள் இசைத்தமிழ் - இசைக் குறுவட்டுகள்- இலவமாகப் பதிவிறக்கம்

 

இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்களைப் பயன்படுத்தி இசைக் கோப்புக்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 திருக்குறள் இசைத்தமிழ்க் குறுவட்டினை இலவமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த இணைப்பினைச் சொடுக்கவும்.

குறுவட்டு - 1

1. அகரம் முதல எழுத்தெல்லாம்
Source : http://ta.cict.in/thirukkural330-tamil-maiyam