Sunday, July 13, 2014

"விபத்து, தீராத நோய்கள் போன்ற அவஸ்தைகள் இல்லா மரணம் வேண்டும்”

”இதுவரை நான்” என்னும் அவரின் நூலைப் படித்துவிட்டு அதுவரை நான சிலகாலம் மரபை விட்டு புது நதியில் நீந்தினேன். இந்த அறிவு ஜீவி இன்னும் நாத்திகரா என்பதில் எனக்குள் அடிக்கடி எழும் வினா?
ஆயினும் மரணத்தைப் பற்றிய ஒரு வினாவுக்கு (இதே ஆனந்த விகடன் கேள்வி-பதில் மேடையில்) ஓர் அருமையான விளக்கம் கொடுத்திருந்தார். 

 “மரணம் என்பது மரத்திலிருந்து விழும் பூ போல் தானாக - அமைதியாக மண்ணில் விழுந்து மடிய வேண்டும்; விபத்து, தீராத நோய்கள் போன்ற அவஸ்தைகள் இல்லா மரணம் வேண்டும்”



இது ஒவ்வொரு ஆன்மாவின் ஆதங்கம்; இந்த நாத்திகர்க்கும் ஓர் உறுத்தல் ஏற்பட்டிருப்பதை அறிந்து இவரிடம் முறையாக இறைச்செய்தியை எத்தி வைத்தால் நாத்திகம் விட்டு ஞானம் பெறுவார் என்பதும் என் நம்பிக்கையாகும்.
குறிப்பாக இவர்க்குப் பனைக்குளம் பகுதியில் உள்ள முஸ்லிம் பெரியவரிடம் சிறுவயது முதல் ”அனுபவ மொழிகள்” என்று கேள்வி ஞானத்தில் நிரம்பக் கற்றிருக்கின்றார்; அதன் வெளிப்பாடே அவரின் விடைகளில் காணலாம்.
முத்துப் படத்தின் பாடல் வரிகளும், இன்றைய ஆன்ந்த விகடன் பேட்டியில் 
“ உண்டு, உடுத்திக் கழித்தது மிச்சம் தான் வாழ்க்கை”
 என்பது அந்த முஸ்லிம் பெரிய்வரிடமிருந்துப் பெற்ற “அனுபவ மொழி”என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kalam Shaick Abdul Kader
KALAM SHAICK ABDUL KADER

No comments: