அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
.
விளக்கம் :
அறமாகிய கடலையுடைய அந்தணனது (இறைவனுக்கு அடிபணிந்தவனது) இடம் சேர்ந்தவனல்லாது, மற்றவர்க்கு பிறவி கடலை நீந்துவது கடினமாகும்.
குறிப்பு :
அந்தணன் என்பது சாதி அல்ல, பண்புப்பெயர் ஆகும், மேலும் குறள் 30 இவ்வாறு விளக்குகிறது "எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்". மற்றும் இக்குறள் அந்தணணோடு சேர்ந்து இருப்பதை மட்டும் பொருளாக எடுத்து கொள்ளமுடியாது, மேலும் அவனது குணங்களை தன்னுள்ளே எடுத்து கொள்ளுவதையும் குறிக்கும் எனவே அந்தணணுடன் சேர்ந்து அந்தணனாக மாறுவதே முதல் பத்தியின் பொருள்.
.
குர்ஆன் : 4:139., 3:102. & 3:185.
- "இவர்கள் நம்பிக்கையாளர்களை (முஸ்லிம்களை) விடுத்து நிராகரிப்பவர்களையே நண்பர்களாகவும் எடுத்துக் கொண்டார்கள். இவர்கள் அவர்களிடத்தில் கண்ணியத்தை விரும்புகின்றார்களா? .."
-"நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்பட வேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் இறந்துவிட வேண்டாம்."
- "... இவ்வுலக வாழ்க்கை மயக்கக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை."
.
விளக்கம் :
முஸ்லிம்களையே நண்பர்களாக எடுத்துக்கொண்டு இறைவனுக்கு வழிபட்டவர்களாக முஸ்லிம்களாகவே மரணியுங்கள். இல்லயேல் மயக்கும் இவுலக வாழ்க்கையை கடப்பது கடினமாகும்
குறிப்பு :
இங்கு முஸ்லிம் என்பது சாதியல்ல, பிறப்பால் முஸ்லிமாக இருந்தும் பாழிப்பாவத்திற்கு அஞ்சாது இறைவனின் கட்டளையான அறத்தை பேணாது இருக்கும் முஸ்லிம்கள் இதில் அடக்கம் இல்லை. அந்தணன் முஸ்லிம் இரண்டுமே படைத்த உவமையற்ற ஒரே இறைவனுக்கு அடிபணிந்தவன் என்னும் ஒரே பொருள் தரக்கூடியது.
Reference :
1) https://in.answers.yahoo.com/
2) http://
3) http://www.ujiladevi.in/2013/
4) http://
5) http://www.eegai.com/
6) http://www.tamililquran.com/
7) http://www.tamililquran.com/
Rafeequl Islam T
What does ISLAM really teach?
#1 திருக்குறளும் திருக்குர்ஆனும்திருக்குறளும் திருக்குர்ஆனும்
#6 திருக்குறளும் திருக்குர்ஆனும்
#7 திருக்குறளும் திருக்குர்ஆனும்
No comments:
Post a Comment