Wednesday, July 16, 2014

ஐநான்னா!

ஐநா அல்ல
ஐயாயிரம் நா சுழன்றாலும்
வல்லரசின்
செவிகளுக்குள்
அழுகுரல்கள்
செல்லவே செல்லாது

ஐநான்னா
அமெரிக்காவுக்கு
அரையணாதான்

அமெரிக்காதான்
ஐநாவுக்கும்
நைனா
 
------------------------------------------------------------------


உலக நாடுகள் சபை, செத்தது எத்தனை என்ற புள்ளி விபர கணக்கு மாத்திரமே எடுக்கும் பணியை எப்பவோ ஆரம்பித்து விட்டது என்பதை அறியாமல் வெகுளியாக இருக்கிறீர்களே,அலி பாய்!!

 
----------------------------------------------------------------------------------------
புல்லுரிவிகள் புகழ் நாடி .பணம் நாடி
நம்மை பிரித்தாளும் சக்தியை உருவாக்கியமையால்
ஒற்றுமையில் சிக்குண்டானதால்
நமக்கு நாமே மோதும் நிலைக்கு தள்ளப் பட்டோம்
அயலானின் ஆற்றலால் நம்மாற்றல் வீழ்ந்தது
இஸ்ரேலியர்கள் கொத்து கொத்தாக ஏவுகணைகளை வீசுகின்றனர்
குழந்தைகளையும் கொன்று குவிக்கின்றார்கள்
அதையும் உலகம் வேடிக்கை பார்க்கின்றது
உலக நாடுகளின் சபை சிக்கினை அவிழ்க்க சேரவில்லை
உலக நாடுகளின் சபை செல்வமான நாடுகளின் அதிகாரத்தில் சிக்கித் தவிக்கின்றது

No comments: