சென்னை: சென்னையில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் உயிர் பிழைத்த ஒருவர் அவர் உபயோகித்த செருப்பை, "எங்கே?" என்று கேட்டது அனைவரையும் வியப்படைய வைத்தது.
தமிழகத்தை உலுக்கிய சென்னை கட்டிட விபத்தில், இடிபாடுகளில் சிக்கியவர்களைக் காப்பாற்ற மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அப்போது மோப்ப நாய் ஒரு இடத்தை பார்த்து நீண்ட நேரம் குலைத்துள்ளது. அங்கே ஆள் இருப்பதை உணர்ந்த பாதுகாப்பு வீரர்கள் அங்கே பார்த்த பொழுது,ஒரு நபர் உள்ளே சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது.
ஆனால் அவரை மீட்கும் பணியினை தொடங்கியுள்ளனர். சிறிது நேரத்தில் உள்ளே இருக்கும் நபரின் குரல் கேட்க தொடங்கியுள்ளது.இதனையடுத்து அவரிடம் பேச்சு கொடுத்து கொண்டே இடிபாடுகளை நீக்கும் பணியினை வேகமாக செய்துள்ளனர்.
பின்னர் அவரை மீட்டபோது, மயக்கத்தில் இருந்த அவர் தன் பெயர் விகாஷ் குமார் என்றும், மேலும் அவர்களைப் பார்த்து “எங்கே என் செருப்பு?” என்றும் கேட்டுள்ளார்.
உடனே மீட்பு படைத் தலைவர் அவரிடம் கனிவாக, நாம் புதிதாக காலணிகள் வாங்கி கொள்ளலாம் என தெரிவித்துவிட்டு, அவருக்கு குடிக்க தண்ணீர் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, நீண்ட நாட்கள் எதுவும் உண்ணாமல் சோர்வில் மயக்கமுற்று இருந்த அவரை சிகிச்சைக்காக அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
Source :http://inneram.com/
No comments:
Post a Comment