#1 திருக்குறளும் திருக்குர்ஆனும்
குறள் - 01:01 :
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
விளக்கம் :
அகரம் எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
தமிழ் : அ, (அ - அகரம் )
ஆங்கிலம் : A, (அ - அகரம்)
ஹிந்தி : अ, (அ - அகரம் )
தெலுகு : అ, (அ - அகரம்)
அரபிக் : ا, (அலீஃப் - அகரம்)
சீனமொழி : 诶, (அ - அகரம்)
எபிரேயமொழி : א, (அலீஃப் - அகரம்)
சம்ஸ்கிருதம் : अ, (அ - அகரம்)
கிரேக்கம் : α (ஆல்ஃபா - அகரம்)
- மேலும் எத்தனை மொழிகளை ஆராய்ந்தாலும் அதன் முதல் எழுத்து அகரமாகவே இருக்கிறது. எனவே அடுத்த வரியும் நிதர்சனமான உண்மையாகத்தான் இருக்க முடியும்,எனவே முழு உலகமும் ஒரே இறைவனிடம் இருந்து தோன்றியதே.
குர்ஆன் : 01:01
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.
விளக்கம் :
உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மயான அதாவது படைத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.
குறிப்பு : ஆதிபகவனே வணங்க தகுதியானவன் மேலும் அவனது குணங்களாக திருக்குறளில் குறிப்பிடுவதும் இஸ்லாத்தில் குறிப்பிடுவதும் ஒரு வார்த்தையை இரு மொழிகளில் எழுதியது போல் உள்ளது. மேலும் விரிவான பதிவுக்கு குரல் 9-ஐ வாசிக்கவும்
Reference :
1) http://www.thirukkural.com/2009/01/1.html#2
2) http://www.tamililquran.com/qurandisp.php?start=1
Rafeequl Islam T'
No comments:
Post a Comment