புலம்பெயர்ந்து வாழும்போதும் சொந்த மண்ணிலேயே உயர் கல்வி பயிலும்போதும் பிறமொழிச் சொற்களுள் சில, நம் மொழிக்குள் ஊடுறுவதை தவிர்க்க முடியாதுதான். அதில் பிழை ஏதும் பெரிதாய் இல்லை.
உலகின் ஒவ்வொரு மொழிக்குள்ளும் ஏற்புடைய பிறமொழிச் சொற்கள் நாகரிகமாகப் புகுந்திருக்கின்றன. அவற்றை ஏற்றுக்கொள்ளும் இலக்கணக் குறிப்புகளைத் தொல்காப்பியரும் தந்திருக்கிறார்.
அவை அந்த மொழிக்கு வரவுதானே தவிர கேடில்லை.
Catamaran என்ற ஆங்கிலச் சொல் கட்டுமரம் என்ற தமிழ்ச்சொல். அதுபோல பல சொற்கள் தமிழிலிருந்து பிற மொழிக்குச் சென்றிருக்கின்றன.
அதுபோலவே பிறமொழிகளிலிருந்து தமிழுக்குள் வந்திருக்கின்றன.
ஆனால் தன் மூல வேரையே துண்டித்துக்கொண்டு, வேற்று மரத்தின் மீதேறிக்கொண்டு அந்த மரத்தின் வேர்களையே தன் வேராய்க் ஆக்கிக் கொள்ளும் நிலைதான் மிகவும் பிழையானது.
அது தமிழ் இனத்தையே அழித்து முடித்துவிடும்.
ஆயிரம் போர் வந்தாலும் தமிழனை அழிக்கவே முடியாது. ஆனால் தமிழனின் மொழிப்பற்று மட்டும் திசைமாறினால் போதும் அப்போதே அழிந்துபோகும் தமிழும் தமிழ் இனமும்.
ஆக்கம் கவிஞர் அன்புடன் புகாரி அவர்கள்
நன்றி http://anbudanbuhari.blogspot.in\

No comments:
Post a Comment