Monday, July 14, 2014

தந்தை சொற்படி நாகரீகமாக எழுத கற்றுக்கொண்டேன்.

1999-2000 ஆண்டுகளில், நான் பத்திரிகைகளில் வாசகர் கடிதம், துணுக்குகள் எழுதிக்கொண்டிருந்த சமயத்தில், ராஜு சுந்தரம் - சிமரன் காதல் உச்சத்தில் இருந்த நேரம். ஒரு முறை ஐரோப்பாவிற்கு சூட்டிங்கிற்காக போய் திரும்பிய ராஜு சுந்தரத்தின் பேட்டியை ஆனந்த விகடன் போட்டிருந்தது.
"அதெல்லாம் கிடக்கட்டும், ஐரோப்பாவிலிருந்து சிம்ரனுக்கு என்ன வாங்கி வந்தீங்க ராஜூ சுந்தரம் சார்?"- என்று ஒரு வாசகர் கடிதத்தை சும்மா வேடிக்கையாய் விகடனுக்கு அனுப்பி அது அடுத்த வாரம் பிரசுரமாகியிருந்தது.
அதை படித்த என் தந்தை "ஏன்டா சிம்ரனுக்கு அந்தாளு என்ன வாங்கி வந்தா உனக்கென்னடா?, இந்த மாதிரி கருமத்துக்கெல்லாம் ஏன்டா ரஹீம்ன்னு என் பேரையும்
சேர்த்து எழுதி என்னை கேவலப்படுத்தறே?, உனக்கு எழுத ஆசைன்னா வெறும் கஸாலின்னு உன் பேரை மட்டும் எழுதி தொலைய வேண்டியதுதானே?" என்றார். எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. இனி என் தந்தைக்கு சங்கடத்தை கொடுக்கக்கூடாது என்று முடிவு செய்து அப்போதிலிருந்து நான் அப்படி எழுதுவதில்லை. ஓரளவு நாகரீகமாக எழுத கற்றுக்கொண்டேன். அது இன்றும் தொடர்கிறது.
என்னையும் அறியாமல் பிளாக்கிலோ, முகநூலிலோ ஏதாவது முகம் சுளிக்கும் படி எழுதியிருந்தால் யாராவது அதை சுட்டிக்காட்டும்போது தயங்காமல் திருத்திவிடுவேன்.

#நினைவுத்துவம்.



                                         மர்ஹூம்  அப்துல் ரஹீம் அவர்கள்

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான் சிலருக்கு ஏணியாகவும், சிலருக்கு தோணியாகவும், எனக்கு எல்லாமுமாக இருந்த என் தந்தை அப்துல் ரஹீம் அவர்கள் இறந்தார்கள். என் தந்தைக்காக பிரார்த்தனை செய்யுங்க நண்பர்களே

#நினைவுத்துவம்..




                                                         ரஹீம் கஸாலி கஸாலி

No comments: