N.S.M. Shahul Hameed
வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர் நீச்சல்!
அட சரிதான் போடா ‘LOCK DOWN’ என்பது வெறும் கூச்சல்!
நமது கல்வி முறை என்பது பண்பாட்டையும், இலக்கியங்களையும், அறிவுசார் கலைகளின் பயன்பாட்டையும் கற்றுத்தருவதைக் காட்டிலும்; ஒரே பொருளின் பல்வேறு பரிமாணங்களைப் பல்வேறு கவர்ச்சியான தலைப்புகளின்கீழ் பயில்வதில்தான் கவனம் கொண்டு திரிகிறது. வர்த்தக மயம் விதிக்கும் விலைவாசி ஏற்றமும், கை நிறைய அள்ளித்தரும் கவர்ச்சியான சம்பளங்களும்தான் இன்றய கல்வித்திட்டங்களை வடிவமைக்கின்றன.
ஒரு சில கல்லூரிகள் மட்டுமே இந்தக் குறைபாடு இன்றிச் சிறந்த பயிற்சியுடன் மாணவர்களைத் தயார் செய்து அனுப்புகின்றன. ஆனால் இதுபோன்ற கல்லூரிகளில் சேர்ந்து பயில, ஒன்று மிக அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதிகமான பணம் வேண்டும்.
உண்மையில் மாணவர்கள் தமது மூன்றாண்டு இளங்கலைப் பட்டப்படிப்புக் காலத்தில் அறிந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கின்ற, அறிந்துகொள்ள முடியக்கூடிய கலை / அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பயிற்சிகள் நிறையவே இருக்கின்றன. ஆக, நமது கல்வித்திட்டங்கள் இந்த வாய்ப்புகளை அளிக்கும் விதத்தில் இருத்தல் வேண்டும். ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மருத்துவம் போன்ற குறிப்பிட்ட துறை தவிர்த்து, மாணவர்களின் திறமை அவர்களின் எதிர்கால வேலை வாய்ப்புக்கு அளவிடப்படும்போது, அவர்கள் பெற்ற மதிப்பெண்களைப் பார்க்காமல் எந்த அளவு குறிப்பிட்ட வேலையைத் திறம்படச் செய்வதற்கும் அத்துறையில் மேன்மேலும் முன்னேறவும் இயலக்கூடிய திறமைகளை அந்த மாணவரிடம் கண்டறிய முயல வேண்டும். குறிப்பாக எந்தக் கல்லூரியில் படித்தவர் என்று பார்த்துத் தேர்வு செய்யும் மனப்போக்கு, இன்று வளாகத் தேர்வு (கேம்பஸ் இண்டெர்வியூ) முறையில் வந்துவிட்டது. இது பலவகையில் ஏழை மாணவர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது.
வெறும் பட்டமும், தாம் பயின்ற கல்லூரியின் பெயரும்தான் என்பதிலிருந்து; தாம் அறிந்து கொண்டு உடனடியாக வேலைக்கு அல்லது சுய தொழில் துவங்கும் முனைப்புடன் தயார் நிலைக்கு வரக்கூடிய குறிக்கோளுடன், உத்வேகமும், படிப்பின்மீது உற்சாகமும் கொண்டிருப்பவர்களுக்கு, வாழ்வின் மற்ற அத்தியாவசிய விசயங்களைப் பார்த்துக்கொண்டே இந்தத் தற்காலக் கல்வியையும் கற்பதற்கேற்ப Distance Learning, eLearning என்றழைக்கப்படும் தொலை தூரக் கல்வி முறை, மின்னணுவியல் / கணினி மூலம் பயிலுதல் ஆகியவை பற்றி உலகெங்கும் கல்வியாளர்கள் மிகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு அதன் பயனால் பயிற்சி முறையிலும், பாடத்திட்டங்களை வடிவமைப்பதிலும் பல பயனுள்ள மாற்றங்களைச் செய்வதற்கு உதவியுள்ளனர்.
இன்று, உலகின் தரம்வாய்ந்த பலகலைக் கழகங்கங்கள் அனைத்துமே தொலைநிலைக் கல்வி முறையை மிக நேர்த்தியாக வடிவமைத்து உலகெங்கும் பரப்பி வருகின்றன.
இன்றய நிலையில், தொலைநிலைக் கல்வித் திட்டத்தில் ஒவ்வொரு தாலுகா அளவில் மின் நூலக வசதியுடன் கூடிய பயிலகங்களை அமைத்திட வழிவகுத்து, அவற்றிலிருந்து அளிக்கப்படும் பல்கலைக் கழகத்தின் வாராந்திரப் பயிற்சிகளின் மூலம், கீழ்கண்ட வசதிகளை ஒவ்வொரு மாணவரும் பெறச் செய்து; அவர்களின் கல்லூரிக் காலக் கனவுகளை ஈடு செய்துவிடுவதுடன் அதனினும் சிறப்பான எதிர்காலத்தையும் கொடுத்துவிட முடியும்.
1. உயர்தரமான ஆசிரியர்களைக் கொண்டு, பட்டப் படிப்பின் பாடத்திட்டங்களுக்கேற்ப, மாணவர்கள் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் பாடங்கள் எழுதப்பட வேண்டும்.
பாடத் திட்டங்களைப் புரிந்துகொள்ளவும், கணினி மற்றும் வணிகவியலில் பயன்படும் செயல்முறை மற்றும் வழிகாட்டிக் குறிப்புகளை அறிந்துகொள்ளவும், ஒரு துறையின் ஒழுங்கமைப்பு வடிவங்களைப் புரிந்து பயன்படுத்தவும் தேவையான பழகுப் பயிற்சிகள் மாணவர்களுக்கு வாரந்திர நேர்முக வகுப்புகளில் முதல் கட்டத்திலேயே அளித்து அவர்கள் சுயமாகப் பாடங்களைப் படிக்கும் தன்னம்பிக்கையை வளரச்செய்ய வேண்டும்.
3. ஒவ்வோர் ஆண்டும் மாணவருக்கு ஒதுக்கப்படும் தனிமுறைப் பயிற்சிகள், வீட்டுப் பாடங்கள் போன்றவற்றிற்கான கால அட்டவணையை மாணவர்கள் தாமே தயார்செய்து கொண்டு அதன்படி குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கும் வகையில் ஒழுங்கான திட்டமிடலுக்கு வழிவகுத்து, தேவையான பாடங்கள் அனைத்தையும் முன்பே அளித்துவிடவேண்டும்.
4. இணையதளத்தில் பதிவிரக்கம் செய்யவும், மின்னஞ்சல் மூலம் பாடங்களைப் பெறவும், பயிற்சி வினாவுக்கான விடைத்தாள்களை அனுப்பவும் வசதி செய்து கொடுக்க வேண்டும். இணையதள வசதியில்லாத ஏழை மாணவர்களுக்கு அருகிலுள்ள பயிலகங்களில் / நூலகங்களில் இணையதள இணைப்பை இலவசமாக பெற்றுப் பயனடையும் வசதிகளை செய்துதர வேண்டும்.
5. பாடம் தொடர்பான கேள்விகள், சந்தேகங்கள், தொடர்புடைய தகவல்களைச் சக மாணவர்களும், ஆசிரியர்களும் பரிமாறிக் கொள்ளும் வகையில், இணையதள மன்றங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இந்த மன்றங்களில் நடைபெறும் உரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்களைக் கண்கானித்து நெறிப்படுத்த தக்க கல்வியாளர்களையும் நியமிக்க
N.S.M. Shahul Hameed
...
No comments:
Post a Comment