45 வருடங்களுக்கு முன்னால்
MBBS முடித்தவுடன் அரசு வேலை
தேடி வரும்.IAS எழுதுவது மிகவும்
எளிது.பாஸ் செய்தால் ஒன்று
டாக்டர் ஆகலாம், இல்லையேல்
அரசு அதிகாரி ஆகலாம்.நமது
நாட்டில் அரசியல்வாதியாக
முதல்வராக பிரதமராக கல்வி
மட்டும் தேவை இல்லை.
அரசு பதவியில் இல்லை
என்பதாலேயே பதவியில்
இல்லாதவர்கள் முட்டாள்கள்
இல்லை.
ஐஐடி யை நாம் மிகவும் உயர்வாக
கருதுகிறோம்.ஆனால் நோபல்
லாரட்கள், ஃபேகல்டியில் இல்லை
என்பதால் சர்வதேச அளவில்
அதன் தரம் குறைத்து மதிப்பீடு
பெறுகிறது.
தமிழகத்திற்கு ஒரு மருத்துவப்
பல்கலைக்கழகம் தேவை
என்பதை எம்ஜிஆர் க்கு
சொன்னவர் பேராசிரியர்
டாக்டர் காமேஸ்வரன்.
எம்ஜிஆர் அதை செயலில்
காட்டினார்.கலைஞர் ஒரு
படி மேலே போய் எம்ஜிஆர்
மருத்துவ பல்கலைக் கழகம்
என்று பெயர் சூடி மகிழ்ந்தார்.
அமெரிக்காவில் வைரஸ்
தாக்குதல் புள்ளி விவரங்களை
ஜான்ஸ் ஹாப்கினஸ் பல்கலைக்
கழக கொரோனா வைரஸ்
தகவல் மையம் அட்டவணை
படுத்துகிறது.மேற்கத்திய நாடு
களில் எல்லா மருத்துவ பல்கலை
கழகங்களும் இதைத்தான்
நாளும் செய்து வருகின்றன.
நமதூரில் அமைந்த எம்ஜிஆர்
மருத்துவ பல்கலைக் கழகம்
கொரோனா பற்றி எந்த ஆய்வும்
நிகழ்த்தியதாக தெரியவில்லை
அந்த பல்கலைக்கழகம்
கொரோனா நோய் ஆய்வில்
இருப்பதாகவும் தெரியவில்லை.
சுகாதாரத்துறை செயலரும்
முதல்வரும் தரும் மருத்துவ
அறிக்கைகள் முரண்படுகின்றன.
ஒரு நாட்டில் இருந்து பிற
நாடுகளுக்கு தொற்றும்
நோயைத்தான் “பேண்டமிக்”
என்று சொல்கிறோம்.நோய்
கண்டறிய தமிழக சுகாதாரத்
துறை 10 லட்சம் பேர்களில்
285 பேர்களுக்கே நோய்
தொற்றுக் கான டெஸ்ட்
நடத்தியிருப்பதாக அறிவித்து
இருப்பது ஆச்சரியம் தருகிறது.
அதிக டெஸ்ட்கள் நடைமுறை
அத்தியாவசிய தேவைகளாகும்.
அடுத்த மூன்று நான்கு நாட்களில்
பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை
பூஜ்யமாக வரும் என்று அரசு
சொல்வதை மனப்பூர்வமாக
ஏற்றுக்கொள்வதில் தவறு
இல்லை.
எம்ஜிஆர் ஜெயலலிதா ஆட்சியில்
சுகாதாரத்துறை செயலாளார்
களாக இருந்த மூத்த ஐஏஎஸ்
அதிகாரிகளான Munir Hoda
Ramasundaram,Alavudin IAS
போன்றவர்கள் சேவையை
அநுபவத்தை அறிவியல்
ரீதியான ஆலோசனைகளை
கொரோனா கால கட்டத்தில்
அரசு பயன்படுத்தலாம்.
Just an advice only
DR.HABIBULLAH
Former Member
High - Level
Advisory Committee
Chief Minister’s
Nutritious Meals Programme
Government of Tamilnadu
No comments:
Post a Comment