Wednesday, April 1, 2020

வளர்ப்பது மிகவும் விருப்பமாக இருந்து தொடர்கின்றது .

நாங்கள் சிறு வயதில் வசதியாக இருந்தாலும்  எங்கள் அம்மா அவர்கள் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வீட்டின் கொள்ளையிலேயே பயிரிடுவார்கள் அதோடு நாட்டுக் கோழிகளையும் விற்பதற்காக வளர்க்காமல், எங்கள் தேவைக்கு வளர்த்து வருவார்கள் .
அந்தக் காலத்தில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் நாட்டுக் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இதன் மூலம் தங்களது வீடுகளுக்கு தேவையான கோழி முட்டை, நாட்டுக் கோழி இறைச்சி ஆகியவை கிடைத்து வந்தன. கோழிகளில் அதிக அளவில் புரதச் சத்து நிறைந்து காணப்படுகிறது.

அதனால் நாங்கள் வெளியில் சென்று அதிகமாக காய்கறிகளையும் கோழி மற்றும் அதன் முட்டைகள் வாங்க தேவையில்லாமல் இருந்தது .அவர்களால் ஊக்கமாக செயல்படுத்தப்பட்ட வீட்டுக்குத் தேவையான அனைத்துச் செயல்கள் மீதும் எங்களுக்கும் அதில் உள்ள ஆர்வம் தொடர்ந்தது
இப்பொழுதும் நாங்கள் வீட்டுக் கொள்ளையில் காய்கறிகள் உற்பத்தி செய்வது மா ,தென்னை மரங்களையும் வளர்ப்பது மிகவும் விருப்பமாக இருந்து தொடர்கின்றது .
எங்கள் குடும்ப சகோதர சகோதரிகள் வீட்டுத் தோட்டங்களில்  பலவகை வாழை,மா மரங்கள் உள்ளன
அதில் மா வகையில் குறிப்பாக பாதிரி ,ஒட்டு . ஹிமாம்பசந்த் போன்ற மா மரங்கள் இருக்கின்றன
அம்மாதிரியே மாதுளை ,மல்லிகை ,ரோஜா ,எலுமிச்சை .நெல்லி .தென்னை செர்ரி ,ஓமம் வேம்பு மற்றும் பல இருக்கின்றன .இவைகளை பராமரித்து வளர்ப்பதில் பெரு மகிழ்வடைகின்றோம்


மாம்பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்
மாம்பழத்தில் பல வகை உண்டு
மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது.
மாம்பழத்தில் இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது.
இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் அதனை அளவோடு சாப்பிட வேண்டும்
அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு வந்து விடும்
மாம்பழத்தில் இனிப்பும் அதிகமாக இருப்பதால்
மாம்பழத்தை  சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வார்கள்

மயிலாடுதுறை பாதிரியார் ஒரு புது வகை மாம்பழத்தை உருவாக்கினார்
 இந்த பழம் ஒரு பாதிரியார் பங்களாவில் இருந்த மரத்தில் காய்த்த பழம் என்பதால் இதை பாதிரி மாம்பழம் என்று சொல்வோரும் உண்டு.
அதனால் அந்த மாம்பழத்திற்கு' பாதிரி மாம்பழம்' என்ற பெயர் வந்து விட்டது 
இது மயிலாடுதுறை சீர்காழி ஆகிய இடங்களில் கிடைக்கிறது. சில இடங்களில் 60, 70 ஆண்டுகள் வயதுள்ள மரங்களும் உண்டு.
இது மயிலாடுதுறை பக்கத்தில் மட்டும் உற்பத்தி செய்யப் படுகின்றது
' பாதிரி மாம்பழம்'  மிகவும் சுவையானது .

எனது நண்பர் வாலாஜாபாத் தோட்டத்தில் ஒரு புது மாம்பழம் இருந்தது .
அதிலிருந்து பல மாம்பழங்களை எனது நெருங்கிய நண்பர் திரு .தாஸ் எனக்கு தந்தார்
அதனை எங்கள் ஊர் நீடூருக்கு கொண்டு வந்து சாப்பிட்ட பின் அதன் கொட்டைகளை
எரு குழியில் போட்டு விட்டோம்
தூக்கி எறிந்தது முளை விட்டு செடியாகி பெரிய மரமாக வளர்ந்து நிறைய பழங்களைத் தருகின்றது

இது ஒரு 'ஸ்பெசல் மாம்பழம் '
இதன் சுவையோ தனி சுவை .
புளிப்பு இருக்காது .
இதனை பலருக்கு கொடுத்தேன் .அதனை சாப்பிட்டவர்கள் அனைவரும் மகிழ்ந்து தங்களுக்கு ஒவ்வொரு வருடமும் கொடுக்க வேண்டுமென விரும்புகின்றார்கள் .இம்மாதிரி  'ஸ்பெசல் மாம்பழம் '  இப் பக்கமே கிடையாது



No comments: