ரமல் என்றால் கருக்குதல் என்று பொருள்.
கரும்பு விளைவிக்கப்பட்ட விளைநிலத்தில் அறுவடைக்குப்பிறகு கருக்குவார்கள்.அது எதற்காக...???
மண்ணின்/நிலத்தின் வளத்துக்காக.அப்போதைக்கு அவை கருக்கப்பட்டாலும் கருக்கப்படுவதன் நோக்கம் மீண்டும் உயிர்ப்புடனும் வளமையுடனும் வளரவேண்டும் என்பதுதான்.
அதுபோல நான்/என்னுடைய என்னும் மாயையான நம் சுயத்தைக் கருக்குவதற்கும் எல்லா படைப்பினங்களுக்கும் மூலமாக இருக்கும் ரட்சகனில் தன்னை அடையாளப்படுத்துவதற்கும் அந்த ரப்புல் ஆலமீன் ஏற்படுத்திக் கொடுத்த ஒரு அற்புதமான பயிற்சிதான் நோன்பு என்பதாகும்
.
ஹக்குதான் ஹல்க்காக உலவிக்கொண்டிருக்கிறது.ஆனால் அது ஹக்களவில் உருண்டுகொண்டும் புரண்டுகொண்டும் இருந்தாலும் ஹல்க்கின் தன்மைகளை விட்டும் முற்றிலுமாக ஒருபோதும் நீங்கிவிடுவதில்லை.
நிஷா மன்சூர் toஇறைக்காக நேசம்,இறைநேசம்...!!
No comments:
Post a Comment