Wednesday, April 22, 2020
ஆபத்து ! ஆபத்து !
--- ஹாஜி மு. ஹிதாயத்துல்லா
இளையான்குடி
பேராசை ஆபத்து ! பிடிவாதம் ஆபத்து !
பெரியோர் சொல் கேளாததும் – மார்க்கம்
பேணாமல் வாழுவதும் பெரும்பாலும் ஆபத்துதான் !
சாராயம் ஆபத்து, சண்டையும் ஆபத்து ! – வீண்
சந்தேகமும் ஆபத்து தான் ! – இங்கே
தன்மானமில்லாமல் பெண்மானை வதைப்போர்கள்
சந்திப்பார் ஆபத்துதான் !
ஏராள நகைபோட்டு எங்கேயும் செல்லாதே !
எந்நாளும் ஆபத்துதான் ! – சிலர்
எங்கேதான் சென்றாலும் ஓசிநகை கேட்கின்றார் !
அதுவும் ஆபத்துதான் !
ஆராய்ந்து சிந்தனை செய்! அப்புறம் முடிவை எடு !
ஆனந்தம் நீ காணுவாய்!
அவசரச் சமையலில் ருசியே இருக்காது
மனிதா நீ உணருவாய் !
மது, மாது ஆபத்து, சூதும் தான் ஆபத்து
மனதிலே நீ யெண்ணுவாய் !
மனதாரப் பொய் சொல்லல், மற்றோரைக் கோள்சொல்லல்
தருமே பேராபத்துதான் !
சதிகாரர் ஆபத்து, சதை நட்பும் ஆபத்து !
சக்திக்கு மீறியே தான்
கடன் வாங்கல் ஆபத்து ! கட்டாயம் ஆபத்து !
கவனம் நீ கொள்ளுவாய் !
அதிகாரத் தோரணையில் அநீதி செய்யாதீர் !
ஆபத்து ! ஆபத்து தான் !
அடைமானப் பொருட்களை அபகரிக்க எண்ணுவதும்
ஆபத்து ! நீ உணருவார் !
நன்றி :
இனிய திசைகள்
ஏப்ரல் 2016
முதுவை ஹிதாயத்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment