என் மனதில்பட்டதை உங்களுடன் பகிர்கின்றேன்
நேற்று லண்டனிலிருந்து மிகவும் நெருங்கிய நண்பருடன் வெகுநேரம் பேசினேன்
அதனைத் தொடர்ந்து பல வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் உறவினர்களும் தொடர்புகொண்டு உரையாடினார்கள் .
இந்த குரோணா வைரஸ் தாக்குதலின் விளைவு உறவுகளையும் நட்புகளையும் நம்முடனேயே இருக்க விரும்புகின்றது
எந்த நாட்டிலும் குரோணா வைரஸ் பாதிப்பு சம்பந்தமாக மதத்தையும் இனத்தையும் தொடர்புகொண்டு பேசுவதில்லை .ஆனால் நம் நாட்டில் மட்டும் இதன் நிலை வேறுவிதமாக உள்ளது .மதத்துக்கும் குரோணாவுக்கும் எந்த இன மத உறவு யாருக்கும் இல்லை .ஏன் இந்த நிலை இந்தியாவில் மட்டும்
அதிலும் முஸ்லிம்கள் மட்டும் குறிவைத்து பேசப்படுகின்றனர் .
இவர்கள் குடியுரிமை எதிர்ப்பு மசோதாவை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து ஆளும் ஆட்சிக்கு எதிராக போராடியது முக்கிய காரணமாக இருக்கலாம்
நமது முஸ்லீம் தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய மக்கள் ஒற்றுமை இல்லாமை ஒரு காரணம் .பெண்களையும் இதன் பொருட்டு தெருவுக்கு வரவைத்துவிட்டனர் இந்த போராட்டம் வேண்டி .
இந்தியாவில் உள்ள முஸ்லீம் மக்கள் போதிய கல்வி பெறவில்லை .கல்வி பெற்றவர்களும் அரசு வேலைக்கு போகாமல் கடை அல்லது மற்ற தொழிலில் ஈடுபட்டுவிடுகின்றனர் .மற்றும் பலர் வெளிநாடு சென்றுவிடுகின்றனர் .
நாம் மற்ற சிறுபான்மை மக்களைப்பற்றி யோசிக்க வேண்டும்
ஐந்து சதவீத பிராமணர்கள் ஐம்பது சதவீதத்துக்கு மேல் ஆட்சி பீடத்தில் இருக்கின்றனர் .பாராளுமன்றத்தில் .கவர்ணர் பொறுப்பில் பாராளுமன்ற மற்றும் அனைத்து வேலைகளிலும் அவர்கள்தான் கோலோட்சி செய்கின்றனர்
கிருத்துவ மக்கள் கட்சி பெயரைச் சொல்லி போராடாமல் ஒற்றுமையாக அவர்கள் கல்வியில் மேம்பாடு பெற்று சிறப்பாக இருக்கின்றனர் .பிராமண சமுதாயமும் கிருத்துவ சமுதாயமும் அலட்டிக்கொள்ளாமல் காரியங்களை கட்சிதமாக செய்கின்றனர் .
நமக்குமட்டும் ஏன் இந்த ஒற்றுமை இல்லை .தலைவர்களும் சரியில்லை முறையான கல்வியும் இல்லை .
ஒரு நாட்டில் ஐம்பது சதவீத மக்கள் கல்வி பெறவில்லையெனில் எப்படிஅந்த நாடு முன்னேற்றம் அடைய முடியும்
சிந்தியுங்கள் அறிவாக செயல்படுங்கள் .ஒற்றுமையும் கல்வியும் இல்லையெனில் நமது வாழ்வு பிரச்சனைதான் .
நல்வழி பெறுவோம் .தேவையில்லாமல் அடுத்தவர் மீது குறைகாணாமல் அமைதியாக செயலில் இறங்குவோம்
முற்றும் அறிந்தவன் இறைவன்
No comments:
Post a Comment